பக்கம் எண் :

ஐந்தாம் போர்ச்சருக்கம்145

காலாள் - பதாதிவகையோடு பதாதிவகையும், ஏலா -  எதிர்த்து, தோலாது-
தோல்வியடையாமல், அடலொடு சீறின-வலிமையோடு கோபித்துப்போர்செய்தன;
(எ-று)

     உயர்திணைப்பெயர்களெல்லாம் சாதியுணர்த்துவனவாக வைத்து 'சீறின' என
அஃறிணைப்பன்மைமுற்றுக் கொடுத்து முடித்தார்.                        (199)

19.-இதுமுதல் மூன்றுகவிகள்-படுகளச்சிறப்பு.

நீடுங்கடகரியின்கரநிரையற்றனநதியா
யோடுங்குருதியின்வாளைகளெனவோடினவொருசார்
கோடுஞ்சிலையம்பிற்றலையரியுண்டனகுறைநின்
றாடுந்தொறுமுடனாடுவவலகைக்குலமொருசார்.

     (இ-ள்.) (அப்போர்க்களத்தில்), ஒரு சார் - ஒரு பக்கத்தில், நிரை அற்றன-
வரிசையாக அறுந்துவிழுந்தனவான, கட கரியின் நீடும் கரம்-மதயானைகளின்
நீண்ட துதிக்கைகள், நதி அய் ஓடும் குருதியின் - ஆறுகளாக விரைந்துபெருகுகிற
இரத்தவெள்ளத்திலே, வாளைகள் என ஓடின-வாளைமீன்கள் போல ஓடின: ஒரு
சார் - மற்றொருபக்கத்தில், கோடும் சிலை அம்பின் - வளைந்த வில்லினால்
விடப்பட்ட (பகைவரது) பாணங்களால், தலை அரியுண்டன-தலை
அறுபட்டனவான,குறை - உடற்குறைகள், நின்று ஆடும் தொறுஉம் - நின்று
ஆடும்பொழுதெல்லாம்,அலகை குலம் - பேய்களின் கூட்டம், உடன் ஆடுவ-
கூடநின்று கூத்தாடுவன;(எ-று.)

     முன்னிரண்டடி - வடிவுவமை. தலையரியுண்டன குறை-கபந்த மெனப்படும்.
தலைநீங்கியஉடல் முன்தொடர்ச்சியால் சிறிதுநேரம் கைகால்களை அசைத்துத்
தொழில்செய்தலையும் பதைபதைத்துத் துடிப்பதையுமே. 'நின்று ஆடுதல்' என்றது:
இனி, "பேரொத்த வாயிரம்பேர் மடிந்தாற்பிறக்குங்கவந்தம், நேரொத்தவாடும்"
என்றபடி, ஒத்த ஆயிரம்வீரர் மடிந்தால் கவந்தமெழுந்து ஆடுமென்று
கூறுதலுமுண்டு. கவந்தம் ஆடும்பொழுது பேய்கள் உடன் ஆடுவது, அவற்றைத்
தாம் உண்ணலா மென்ற களிப்பினாலென்க.                         (200)

20.கோல்கொண்டவைசிலைக்கொண்டவைவாள்கொண்டவைகூர்வாய்
வேல்கொண்டவையவைதம்முடன்விழுகைத்தலமொருசார்
கால்கொண்டுகுசெந்நீர்விரிகளமேககனமதா
மால்கொண்டகரிக்கோடிளமதியாவனவொருசார்.

     (இ - ள்) கோல் கொண்டவை-அம்புகளை எடுத்தவையும், சிலை
கொண்டவை-வில்லைப் பிடித்தவையும், வாள் கொண்டவை-
வாளையேந்தியவையும், கூர் வாய் வேல் கொண்டவை - கூரிய நுனியையுடைய
வேலைத்தரித்தவையுமா யிருந்து, அவை தம்முடன்விழு - அவற்றுடனே அறுந்து
கீழ்விழுந்த, கைத்தலம் - கைகள், ஒரு சார் - ஒருபக்கத்தில், (கிடந்தன); ஒரு சார்
- ஒரு