யப்படும் ஓர் ஆயுதவிசேடம், இருபத்தையாயிரம்-இருபதினாற்பெருக்கிய ஐயாயிரம்:லஷம் என்றாலும் ஒன்று. (203) 23.-சூரியாஸ்தமன வருணணை இவ்வாறுமுனைந்தாருயிரிருசேனையுமடிய மைவானுலகிடமற்றதுவயவீரர்நெருக்கா லவ்வானவர்தமதாலயம்வலம்வந்தவருக்கன் செவ்வானுறுகுடபால்வரையிடமென்றதுசேர்ந்தான். |
(இ-ள்.) இ ஆறு - இப்படி, முனைத்து - போர்செய்து, இரு சேனைஉம் - இருதிறத்துச் சேனைகளும், ஆர் உயிர் மடிய - அருமையான உயிர் நீங்க [இறக்க],வய வீரர் நெருக்கால் - (உடனே வீரசுவர்க்க மடைந்த) வலிமையையுடையஅவ்வீரர்களது நெருக்கத்தால், மை வான் உலகு இடம் அற்றது - கரியஆகாசத்திலுள்ள சுவர்க்கலோகம் வெற்றிடம் (சிறிதும்) இல்லையாயிற்று;(அப்பொழுது), அ வானவர் தமது ஆலயம் வலம் வந்த அருக்கன் - அந்தத்தேவர்களது இருப்பிடமான மேருமலையைப் பிரதஷிணமாகச் சூழ்ந்துவந்த சூரியன்,செவ் வான் உறு குட பால் வரை இடம்என்று - செவ்வானம் பொருந்திய (மேற்குத்திசையிலுள்ள) அஸ்தகிரியைத் தனக்கு இடமாக்கருதி, அது சேர்ந்தான் -அம்மலையை அடைந்தான் [அஸ்தமித்தான்.] பூமியின் மத்தியிலுள்ள மேருமலையை வானத்திலே சுற்றி வருந்தன்மையுள்ள சூரியன் இயல்பாக மறைந்ததை, தேவர்களுக்கு இருப்பிடமாகிய சுவர்க்கலோகமும் மேருகிரியும் போரிலிறந்து விண்ணுலகடைந்த வீரர்களால் நெருங்கியிருப்பதைப் பார்த்து அங்கு எங்குந் தனக்கு இடம்பெறாமல் மேற்குத்திசை மலையைத் தனியே இடமாகக்கொண்டு சூரியன் சேர்ந்தாற்போலுமென உத்பிரேக்ஷித்தார்: தற்குறிப்பேற்றவணி. வானத்துக்கு வடிவ மில்லையாயினும், 'மைவான்' என்பது - தோற்றமாத்திரத்தைக் கொண்டு. (204) 24.-இருதிறத்து மன்னவரும் பாசறைபுகுதல். எப்போதுமரும்போரினிலிதயங்களிகூர்வார் கைப்போதுறுபடைசெம்புனல்வழியேயுயிர்காய்வா ரொப்போதுதலரியாரிருதிறமன்னருமொருவா வப்போதனிகத்தோடுமகன்பாசறைபுக்கார். |
(இ-ள்.) ஏ போதுஉம் - எப்போழுதும், அரும் போரினில் - அருமையான போர்செய்தலிலே, இதயம் களி கூர்வார் - மனங்களிப்பு மிகுபவரும், போது கை உறு - தாமரைமலர்போன்ற (தங்கள்) கைகளிற் பொருந்திய, படை - ஆயுதங்களால், செம்புனல் வழிஏ - இரத்தம் பெருகியவழியாகவே, உயிர் - பகைவருயிரை, காய்வார் - கொல்லுபவரும், ஒப்பு ஓதுதல் அரியார் - (எவரையும்) உவமை சொல்லுதற்குக் கூடாதவர்களும் ஆகிய, இரு திறம் மன்னர்உம் - இரண்டுபக்கத்து அரசர்களும், அ |