பக்கம் எண் :

ஆறாம் போர்ச்சருக்கம்153

யுடைய வீமன், வரம் சிலை பெறுதலின் - (தான் அவனிடம்) சிறந்த
வில்விதத்தையைப் பெற்றவ னாதலால், நெஞ்சின் அஞ்சலி செயா-மனத்தில்
(அவனுக்கு) நமஸ்காரத்தைச் செய்து, தனு வளைத்து - வில்லைவளைத்து,
மலையின்உம் பெரிய தேர் வலவன்உம் புரவிஉம் தலை அறும்படி -
மலையைக்காட்டிலும் பெரியதாகவுள்ள (அவனது) தேரைச் செலுத்தும் பாகனும்
தேர்க்குதிரைகளும் தலைதுணியும்படி, சரம் உதையினான் - அம்புகளைச்
செலுத்தினான்; (எ-று.)

     வெளிபடையாகக் கைக்கூப்பிவணங்குவது போரில் தோல்விக்கு அறிகுறியாக
முடியு மாதலால், மனத்தில் அஞ்சலிசெய்தான். தலைதெரியாது எதிர்த்துச்செய்யும்
போரிலும் வீமன் குரு பக்தியை விடாத சிறப்புப்பற்றி, 'சீறவும்' என்றதை அடுத்து
'நிலைபெறும்புகழினான்' என்றார். தேஸிகன் - குரு; வடசொல். அஞ்சலி -
கைகூப்பித்தொழுதல்; வடசொல். நெஞ்சின் - மனப்பூர்வமாக எனினுமாம். பி-ம்:
பெறுதிறற்றேசிகன்.                                            (214)

9.-பின்னும் பல அரசர்களை வீமன் அழிக்க,
அப்போது தன்னுடன பொருமாறு சல்லியன் அங்குத் தோன்றுதல்,

சூழிவெங்கசரததூரகதநிருபரை
வீழவெங்கணைகளான்மெய்துளைத்தளவிலே
தாழநின்றிலனெழிற்சல்லியன்றன்னொடே
தோழவின்றமர்செய்கென்றொருதிசைத்தோன்றினான்.

     (இ-ள்.) (இவ்வாறு வீமன் துரோணனது தேர்ப்பாகனையுங்குதிரைகளையும்
அழித்துத் தேரைப் பயனற்றதாக்கி), சூழி வெம்கசம் - முகபடாத்தையுடைய
கொடியயானைகளும், ரதம்- தேர்களும், துரகதம்-குதிரைகளும், (என்னும்)
இவற்றின்மேலுள்ள), நிருபரை - அரசர்களை, வீழ-(இறந்துகீழ்) விழும்படி, வெம்
கணைகளால் - கொடிய (தனது) அம்புகளால், மெய் துளைத்த அளவிலே -
உடம்பைத் துளைசெய்தமாத்திரத்திலே, - எழில் சல்லியன் - அழகையுடைய
சல்லியன், தாழ நின்றிலன்-தாமதமாக நிற்காதவனாய், (வீமனைநோக்கி), 'தோழ -
தோழனே!' (இன்று) தன்னொடே அமர்செய்க - இப்பொழுது என்னுடனே
போர்செய்வாயாக,' என்று-என்று சொல்லிக்கொண்டு, ஒரு திசை தோன்றினான் -
ஒருபக்கத்திலே வந்தான்; (எ-று.)

     தனது மருமக்களான நகுல சகதேவர்களுக்கு இரண்டாந்தமையனான
வீமனைச் சல்லியன் 'தோழ' என விளித்தது, போரில் தன்னோடொத்த பல
பராக்கிரம முடையவனாதலால் என்க. அன்றியும், சல்லியன் பகைவர் பக்கத்திற்
சேர்ந்தும், முந்தின அன்பை மறவாமல், 'தோழ' என அழைத்தன னென்க. இனி,
பின் இரண்டடிகட்கு-தாழ நின்றிலன் - (துரோணன் தேரின்றிக்) கீழே
நிற்கமாட்டாதவனாய், எழில் சல்லியன் தன்னொடே தோழ இன்று அமர்செய்க
என்று - அழகுள்ள சல்லியனுடனே 'தோழ!'