இப்பொழுது (நீ எனக்காக வீமனை யெதிர்த்துப்) போர்செய்வாய்' என்று சொல்லி, ஒரு திசை தோன்றினான் - (அவ்விடம்விட்டு) மற்றோரிடத்துக்குப் போயினான் என்பாரு மூளர். துளைத்தளவில்-தொகுத்தல், 10.-சல்லியன்வில்லை வீமன் துண்டித்து அவனைத் தேரொடுந்தூக்கி யெறிதல். வல்லைவெஞ்சமர்செயவல்லைநீவருகென வில்லையுந்துணிசெய்துவெல்லவந்தவனையுந் தொல்லைவெங்கரியெனத்தேரொடுந்தோண்மடுத் தெல்லையம்புவியின்மேலெற்றினான்வீமனே. |
(இ-ள்.) (அப்பொழுது), வீமன்-, (சல்லியனை நோக்கி), 'நீ வெம் சமர் செயவல்லை-நீ கொடிய போரைச் செய்ய வல்லவன்; (ஆதலால்), வல்லை வருக -விரைவில் வருவாயாக,' என - என்று சொல்லி (எதிர்கொண்டு அழைத்து), வில்லைஉம் துணிசெய்து - (சல்லியனது) வில்லையுந்துண்டாக்கி, வெல்ல வந்தவனைஉம் - (தன்னைச்) சயிக்க வந்த அச்சல்லியனையும், தொல்லை வெம் கரி என - முன்னொருநாள் கொடிய யானைகளை எடுத்து எறிந்தாற்போல, தேரொடுஉம் தோள் மடுத்து-தேரொடு தோளிலேஎடுத்து, அம் புவியின் எல்லைமேல் எற்றினான்-அழகிய பூமியிலே மோதினான்; (எ-று.) தொல்லை என்றது, நான்காம்போர் காளை, அந்நாட்போரில் வீமன் யானைகளைக் கைகளால் எடுத்து எறிந்ததைக் கீழ் நான்காம் போர்ச்சருக்கத்தில் ஐந்து பத்துப்பதினோராங் கவிகளிற் காண்க. முதலடியிலுள்ள வல்லை யென்னுஞ் சொல் இரண்டினுள், முந்தினது - வன்மையென்னும் பண்படியாப் பிறந்த முன்னிலையொருமைக் குறிப்பு முற்று; பிந்தினது - விரைவுப்பொருளுணர்த்தும் வல்என்னும் இடைச்சொல் ஐகாரச்சாரியை பெற்றது. (216) 11.- சல்லியனது சலிப்புக்கண்டு வீமன் வீரவாதங்கூற, துரியோதனன் அங்குவருதல். சல்லியன்றன்பெருஞ்சலிவுகண்டங்கையி னெல்லியங்கனியினிநேரலாருயிரெனப் பல்லியங்களுமெழப்பாந்தளம்பொற்கொடி அல்லியந்தெரியலானங்குவந்தணுகினான். |
(இ-ள்.) (இவ்வாறு தான் எற்றியதனால் நேர்ந்த), சல்லியன் தன் பெரு சலிவுகண்டு - சல்லியனது மிகுந்த தளர்ச்சியைப் பார்த்து, வீமன் இனி நேரலார் உயிர்அம் கையின் நெல்லி அம்கனி என - 'இப்பொழுது பகைவர்களது உயிர் உள்ளங்கைநெல்லிக்கனிபோல (என்கைவசத்தது)' என்று வீரவாதங்கூற,- பாந்தள் அம் பொன் கொடி அல்லி அம் தெரியலான்-பாம்பையெழுதிய அழகிய பொற்காம்பையுடைய துவசத்தையும் அக |