விதழ்களால் தொடுத்த அழகிய மாலையையுமுடைய துரியோதனன், பல் இயங்கள்உம் எழ - பலவகைவாத்தியங்களும் ஒலிக்க, அங்கு வந்து அணுகினான் - அவ்விடத்தில் [வீமனெதிரில்] வந்து நெருங்கினான்; (எ-று.) உள்ளங்கைநெல்லிக்கனி, கவிகளால் தெளிவுக்கு உவமை கூறப்படும். இரண்டாமடிக்கு - 'இனிமேல் (நாம் வீமனை எதிர்க்காமலிருந்தால் அவனுக்குப்) பகைவர்களான நம்முடைய சேனையாரது உயிரெல்லாம் அவன்கைவசத்ததாம்' என்றுகருதி எனவும் உரைக்கலாம், அன்றி, துரியோதனன் கூறிய வீரவாதமென உரையிடினுமாம். (217) 12.-துரியோதனன் தம்பிமார்முதலினோரொடுஞ்சேர்ந்து அம்புமாரிபொழிதல். வெம்புயவீமன்மேல்வில்வளைத்தாயிரம் அம்புகண்மாரிபோலார்த்தெழவீசினார் தும்பையந்தார்முடிச்சூழ்படைமன்னருந் தம்பியர்யாவருமாமனுந்தானுமே. |
(இ-ள்.) தான்உம் - (அவ்வாறு வந்த) துரியோதனன் தானும், தம்பியர் யாவர்உம் - (அவனது) தம்பிமார்க ளெல்லோரும், மாமன்உம் -(அவர்கள்) மாமனான சகுனியும், தும்பை அம்தார் முடி - தும்பைப்பூவினாலாகிய அழகியமாலையைச்சூடிய மயிர் முடியையுடைய, சூழ் படை மன்னர்உம் - சூழ்ந்துள்ள சேனையரசர்களும், வெம் புயம் வீமன் மேல் - கொடிய தோள்களையுடைய வீமசேனன்மேல், (எதிர்த்து), வில் வளைத்து - (தம் தம்) வில்லை வணக்கி, ஆயிரம் அம்புகள் - மிகப்பலபாணங்களை, மாரி போல்- மழைபோல, ஆர்த்துஎழ- ஆரவாரித்துச் செல்லும்படி, வீசினார் எய்தார்கள்; (எ-று.)-'தும்பையந்தார்முடி' என்பதை, தம்பியர் முதலியோர்க்குங் கூட்டலாம். 13.-மைந்தர் முதலியோர் புடைவர வீமன் துரியோதனாதியரை யெதிர்த்தல். தோன்றரித்துவசனுஞ்சோகமில்பாகனூர் வான்றடந்தேரொடும்வருகெனச்சென்றெதிர் ஊன்றினான்மைந்தருமிளைஞருமுயிரையே போன்றமைத்துனரும்வாணிருபரும்புடைவர. |
(இ -ள்.) தோன்று அரி துவசன்உம்-விளங்குகிற சிங்கத்தையெழுதிய கொடியையுடைய வீமசேனனும்,-மைந்தர்உம் -(தன்) பிள்ளைகளாகிய கடோற்கசன் முதலியோரும், இளைஞர்உம்-தம்பியரான அருச்சுனன் முதலியோரும், உயிரைஏ போன்ற - உயிரையொத்து மிக அன்புள்ள, மைத்துனர்உம் - மைத்துனன்மாரான திட்டத்துய்மன் முதலியோரும், வாள் நிருபர்உம்-ஆயுதமேந்திய (மற்றும் பல) அரசர்களும், புடை வர-பக்கத்திலே வர,-சோகம் |