பக்கம் எண் :

ஆறாம் போர்ச்சருக்கம்161

கோபங்கொண்டதனால், 'செற்ற விகனன்' என்றார். செற்ற எனப்
பெயரெச்சமாகக்கொண்டு, (அபிமனாற்) பங்கப்பட்ட எனினுமாம். பொருகிற்றினார்
என்ற இறந்தகாலமுற்றில், கில்-ஆற்றலுணர்த்தும் இடைநிலை து - சாரியை. (227)

22.-அப்போதும் விகன்னனை வருந்துமாறுஅபிமன்யு
அம்பினாற் பொருதல்.

நெடியவரிசிலைநிமிரமுறைமுறைநெடியவிசையுடன்விசியுநா
ணிடியுமுகிலெனவகிலவெளிமுகடிடியவதிர்பெருநகையுடன்
கொடியவிகனனைமடியவவனுடல்கொடியகுடருகுகுருதிநீர்
வடியவிருபுயமொடியவுதையினன்வடியகணையொருநொடியிலே.

     (.இ - ள்.) (மற்றும் அபிமந்யு), நெடிய வரிசிலை - நீண்ட கட்டமைந்த
(தன்)வில், முறை முறை - அடிக்கடி, நிமிர - நிமிர்ந்துநிற்கவும்,- நெடிய
விசையுடன் -மிகுந்த வேகத்தோடு, விசியும் - இழுக்கப்பட்ட, நாண் - வில்நாணி,
இடியும் முகில்என-இடிக்கிற மேகம்போலொலிக்கவும்,-அகிலம் வெளி முகடு -
அண்டகோளத்தின் மேல்முகடு, இடிய - அதிரவும்,-அதிர் பெரு நகையுடன்-
ஆரவாரிக்கிற பெருஞ்சிரிப்புடனே,-கொடிய விகனனை - (பகைவர்க்குப்)
பயங்கரனான விகர்ணனை (எதிர்த்து),- அவன் உடல் மடிய - அவனுடம்பு
வருந்தவும்,-கொடிய குடர் உகுகுருதி நீர் வடிய - வலிமையையுடைய -
அவன்குடலினின்று பெருகுகிற இரத்தநீர் வழியவும், - இரு புயம் ஓடிய -
(அவனது) இரண்டு தோள்களும் காயப்படவும்,-வடிய கணை - கூர்மையுடைய
அம்புகளை, ஒரு நொடியில்-ஒருமாத்திரைப்பொழுதிலே, உதையினன் -
செலுத்தினான்; (எ-று.)

     வடிய என்னுஞ் சொல்இரண்டனுள், முன்னது-வடிஎன்னும்
வினைப்பகுதியடியாப்பிறந்த செயவென்னும் வினையெச்சம்: பின்னது - வடி
என்னும் பெயரடியாப் பிறந்த குறிப்புப்பெயரெச்சம். சிலை முறைமுறை நிமிர்தல் -
அம்பை யிழுத்துவிடும் பொழுதுதோறும் வில்லின் வளைவு சிறிது மாறல். கொடிய
குடர்-கொடிபோல்சுற்றியுள்ள குடருமாம். குடர் - போலி. பி-ம்: விசையுடன்
வீசினான். (228)

23.- அபிமன்யுவின் வீரத்தைக் கண்டு பகைஞர் அஞ்சுதல்.

மன்னர்மணிமுடிமன்னுகனைகழன்மன்னனிளவல்விகன்னனை
முன்னருறுகணைபன்னர்விழவிழமுன்னரமர்பொரமுன்னினான்
பொன்னசலநிகரன்னபுயவபிமன்னுவொருவனுமின்னுநா
மென்னவமர்பொரவின் னரணுகுவதென்னவெருவினர்துன்னலார்.

     (இ-ள்.) 'பொன் அசலம் நிகர் அன்ன - பொன்மலையான மேருவையொத்த,
புயம் - தோள்களையுடைய, அபிமன்னு ஒருவன்உம் - அபிமன்யு ஒருத்தனும்,-
மன்னர் மணி முடி மன்னு - (வந்து வணங்குங்காலத்தில்) அரசர்களது
இரத்தினகிரீடங்கள்