26. | மாலுமதகடசாலநுதலுமருப்புமொருகையும்வதனமுந் தோலுமொழியவுளானதசைபலபேய்கணுகர்தருதும்பிமா நாலுமறைகளுமோலமெனவகல்வானமெனமுழுஞானமே போலுமெனவொளிர்மேனியுடையவர்போர்வையுரியதள்போலுமே. |
(இ-ள்,) மாலும்-மயங்குதற்குக் காரணமான, மதசாலம்- மதப்பெருக்கைக்கொண்ட, கடம்-கன்னங்களையுடைய, நுதல்உம்-நெற்றியும், மருப்புஉம் - தந்தங்களும், ஒரு கைஉம் - ஒன்றாகிய துதிக்கையும், வதனம்உம்- முகமும், தோல்உம்-(உடம்பின்) தோலும், ஒழிய-நீங்க, உள் ஆன தசை-உள்ளே பொருந்திய சதைகளை, பல பேய்கள் நுகர்தரு- அநேகம் பேய்கள் உண்ணப்பெற்ற, தும்பிமா - யானைகள்,-நாலு மறைகள்உம்-நான்கு வேதங்களும், ஓலம் என - அபயமிட்டழைக்கவும், அகல்வானம் என-பரந்த ஆகாயம் மென்று சொல்லவும், முழு ஞானம்ஏ போலும் என-பூர்ணமான அறிவையே ஒக்கு மென்று சொல்லவும், ஓளிர்-விளங்குகிற, மேனி உடையவர்- திருமேனியையுடைய சிவபிரானுக்கு, போர்வை - போர்வையாக உள்ள, உரி அதள்- உரிக்கப்பட்ட(யானைத்) தோலை, போலும்-ஓக்கும். உடம்பிலுள்ள உறுப்புக்கள் ஒழியத் தோலுரிபட்ட யானைகள், சிவபிரானால்முன்பு தோலுரிக்கப்பட்ட யானையை யொக்கு மென்க. தமது துன்பத்தையழிக்கும்பொருட்டு யாவராலும் அபாயங்கூறி அடையப்படுங் கடவுள் இவரேயென்றும், ஆகாசமூர்த்தி யென்றும், பூர்ணஞானசொரூபி யென்றும் வேதங்களாற்புகழப்பட்டுத் தேசோமயமாய் விளங்குபவர் சிவபிரானென்பது, பின்னிரண்டடிகளில்விளங்கும். சாலம்-ஜாலம் என்னும் வடசொல்லின் விகாரம்: இனிஜலமென்பதன்விகாரமெனக் கொண்டு, நீர் என்றுமாம். அன்றி. 'மதகடசாலும் 'என்றுபாடங்கொண்டு, மதநீரைக் கொண்ட கன்னமாகிய சாலும் என்று பொருளுரைப்பாருமுளர்: சால்-நீர்ப்பாத்திரம். போர்வை-போர்க்கப்படுவது. யானைத்தோலுரித்த கதை:-அருந்தவமியற்றிப் பெருவரம்பெற்ற கஜாசுரனென்பவன்தேவர் முனிவர் முதலியோரை இடைவிடாது வருத்தித் துரத்த, அஞ்சியோடினஅவர்களது பிரார்த்தனையால் பரமசிவன் தம்மை யெதிர்த்துப் போர்செய்யவந்தஅவ்வசுரனைக் காலாலுதைத்துத் தள்ளிக் கொன்று தோலை உரித்துப்போர்த்தருளின தென்றாயினும், தாருகவனமுனிவரேவிய யானையினுட் சென்றுஉருத்திரமூர்த்தி உடலைப்பிளந்து அதனுரிவையைப் போர்த்துக்கொண்ட தென்றாயினுங்கொள்க. (232) 27. | சேனையிபமுகமற்றுவிழுவனசென்றுதிசைவழிகவ்விவிண் போனவயவர்கள்படைகொடெதிரெதிர்பூசல்புரியிருபூதமுஞ் சோனைமழைமுகில்வாகன்முதலசுரேசர்தொழுதுதுதிக்கவே யானைமுகவசுரேசனுடனமராடுமுதல்வனையொக்குமே. |
(இ-ள்.) சேனை - அச்சேனையிலே, அற்று விழுவன-அறுந்து விழுந்தனவாகிய, இபம் முகம்-யானைகளின் முகங்களைக், திசை வழி சென்று கவ்வி-(அவை விழுந்துள்ள) திக்குகளின் இடங்களிலே ஓடிப்போய் (வாயினாற்) கௌவி யெடுத்துக்கொண்டு, விண்போன |