பக்கம் எண் :

ஏழாம் போர்ச்சருக்கம்167

பிரான் விரவி நின்ற மா மருதினூடு - [ஒன்றோடொன்று] கூடி நின்ற பெரிய
மருதமரங்களின் நடுவிலே, தாம் மெத்தென தவழ்ந்து - தாம் மெதுவாகத்தவழ்ந்து
சென்று, அருளி - (அந்த மருதமரங்களுக்கு) நற்கதிகொடுத்து, மீளஉம் புரியும் -
திரும்பிப் பார்த்தருளுகின்ற, நீள் கடைக்கண்உம் - நீண்ட கடைக்கண்களையும்
வண்ணஉம் - அழகையும், போற்றுவார்கள் - துதிப்பவர்களது, மெய் - உடம்பு,
புளகம் ஏறும்-மயிர்ச்சிலிர்ப்பு மிகப்பெறும்;

     இங்கே, உடம்பில் ரோமாஞ்சமுண்டாதல் - அன்புமிகுதியாலாகும்
மெய்ப்பாடாம், வேதமுந் தொடர - "தொடர்ந்த நான்மறை பின்செல" என்றது
காண்க. கண்ணனைப்பெற்ற தந்தை தாயரான வசுதேவனும் தேவகியும், கண்ணனது
குழந்தைதிருவிளையாடல்களைக் காணப்பெறாமல், வளர்த்த தந்தைதாயரான
நந்தகோபனும் யசோதையுமே அவற்றைக் கண்டு களிக்கப்பெற்ற அருமை தோன்ற,
'நந்தகோனுடன் அசோதை கண்டு உருக' என்றார். பூமிதேவியின் பாரத்தை
நிவிருத்தி செய்யும்பொருட்டுக் கண்ணன் தன்னிடம்வந்துதிருவவதரிக்கப்
பெற்றதனாலும், அப்பெருமானது திருக்கைகளும் திருவடிகளும்தன்மீது
பரிசிக்கப்பெற்ற பாக்கியவிசேஷத்தை யுடைமையாலும், பூமியை 'வாழ்வுகூர்
தரணி' என்றார். குழந்தை தவழும்பொழுது பின்னே திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டு செல்லும் இயல்புபற்றி, 'தவழ்ந்தருளி மீளவும் புரியும் நீள்
கடைக்கண்' என்றது. கடைக்கண் - கடாஷம், பகவான் தன்னுடைய
பரத்துவத்தைவிட்டுச் சௌலப்பியத்தைக் கைக்கொண்டு உரலுடன் கட்டுப்பட்டு
எளிமையாக இருந்த இவ்வரலாறு, "பத்துடையடியவர்க் கெளியவன்
பிறர்ககளுக்கரிய, வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும்பெறலடிகள்,
மத்துறுகடைவெண்ணெய் களவினி லுரவிடையாப்புண்டு, எத்திறம் உரலினோ
டிணைந்திருந் தேங்கிய எளிவே" என்று கூறி நம்மாழ்வார் ஈடுபட்டு
ஆறுமாதகாலம் 'மோகித்துக்கிடக்கும்படியான மகிமை யுடையதனால்,
இவ்வரலாற்றைப் போற்றுபவர்களது மெய்புளகமேறும் என்றார். அருளி மீளவும்
புரியும்-(அம் மரங்களுக்கு)முன்னையநிலையை மறுபடி கொடுத்தருளின எனப்
பொருள் கொள்ளலுமாம். நந்தகோன்-நந்தன்கோன் எனப் பிரியும்: இரு
பெயரொட்டுப் பண்புத்தொகை. ஈற்றேகாரம்-தேற்றம்-புளகம் - வடசொல்.
மெத்தென - மந்தக்குறிப்பு,

     கண்ணன் குழந்தையாயிருக்குங்காலத்தில் துன்பப்படுத்துகின்ற பல
திருவிளையாடல்களைச் செய்யக்கண்டு கோபித்த நந்த கோபரின் மனைவியான
யசோதை, ஒருநாள் கிருஷ்ணனைத் திருவயிற்றிற் கயிற்றினாற் கட்டி ஓருரலிலே
பிணித்துவிட, கண்ணன் அவ்வுரலை யிழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த
இரட்டை மருதமரத்தின் நடுவிலே எழுந்தருளியபொழுது அவ்வுரல் குறுக்காய்
நின்று இழுக்கப்பட்டபடியினாலே அம்மரங்களிரண்டும் முறிந்து விழுந்தவளவில்,
முன் நாரதர்சாபத்தால் அம்மரங்களாய்க்கிடந்த நளகூபரன். மணிக்கிரீவ
னென்னும் குபேரபுத்திரர் இருவரும் சாபந்