3.-பாண்டியன் துரோணனுக்குத் தோற்றுப்போக, கடோற்கசன் வருதல். மன்றனிம்பநாண்மாலைமௌலியான்மாறன் மீனவன்வழுதிபஞ்சவ னன்றுபஞ்சவர்க்காகவேயுடன்றந்தணற்குடைந்தஞ்சியோடினான் துன்றுமாயமால்யானைகொண்டுபோர்யானைமன்னரைத்தொல்ல மர்க்கணே வென்றுகண்டவர்புறமவர்க்கிடான்மீளவந்தனன்வீமன்மைந்தேன. |
(இ-ள்.) மன்றல் - வாசனையையுடைய, நிம்பம் - வேப்பம் பூவினாலாகிய, நாள்மாலை - புதியமாலையை, மௌலியான் - முடியிற் சூடியவனும், மீனவன் - மீனக்கொடி யுடையவனும், மாறன் வழுதி பஞ்சவன் - மாறன்முதலிய பெயர்களையுடையவனுமான பாண்டியராசன், அன்று - அப்பொழுது, பஞ்சவர்க்காகஏ உடன்று - பாண்டவர்களுக்காகவே போர்செய்து, அந்தணற்கு உடைந்து - துரோணாசாரியனுக்குத் தோற்று, அஞ்சி ஓடினான்-; துன்று - நெருங்கிய, மாயம் மால் யானை - மாயையினாலாகிய மதயானைகளை, கொண்டு - அமைத்துக்கொண்டு, போர் யானை மன்னரை - போர் செய்யவல்ல (உண்மை) யானைகளின்மேலேறிய (பகதத்தன் முதலிய) அரசர்களை, தொல் அமர்க்கண் - பழைய (நான்காநாட்) போரிலே, வென்று - சயித்து, அவர் புறம் கண்டு - அவர்களை முதுகுகண்டு (முதுகுகாட்டியோடச் செய்து) அவர்க்கு (புறம்) இடான் - அவர்களுக்கு (எப்பொழுதும் தான்) புறங்கொடாதவனாகிய, வீமன் மைந்தன்- கடோற்கசன், (இன்றைப்போரில்), மீள-மறுபடி, வந்தனன்-வந்தான்; (எ - று,) நிம்பம் - வடசொல்; இது-அடையாளப்பூ, சேரசோழபாண்டியர்க்கு, பனை ஆத்திவேம்பின் பூமாலைகளும் வில் புலி மீன் கொடிகளும் முறையே உரியன, மாறன் -{எவரையும்} மாறுபட்டு அழிக்கவல்லவன். புறம் - மத்திமதீபம். பி - ம்: மாலைவேலினான். 4.-சாத்தகிக்குச் சுதாயு தோற்க, வீமன் சகுனிசல்லியரை வெல்லுதல். முகினிறங்கொண்மாமேனிமாயனார்முன்பிறக்கவேபின்பிறந்தவன் புகுநிலத்தனிற்சற்றுநின்றிலன்பொருசுதாயுதன்போர்பொறாமையிற் சகுனியும்பெருஞ்சேனைமுன்வரத்தக்கசல்லியன்றானுமோடவே மிகுநிறங்கொள்பைந்தாமவாகைபோர்வென்றுசூடினான்வீமசேனனே. |
(இ-ள்.) முகில் நிறம் கொள் - மேகம்போன்ற (கரிய) திருநிறத்தைக் கொண்ட,மா மேனி - அழகிய திருமேனியையுடைய, மாயனார் - கண்ணபிரான், முன் பிறக்க- முன்னே (யதுகுலத்து வசுதேவனிடம்) திருவவதாரஞ் செய்ய, பின் பிறந்தவன் -பின்பு (அக்குலத்துச் சத்யகனிடத்திலே) தோன்றின [கண்ணன் தம்பியான]சாத்தியகி, புகும் - (போருக்குச்) சென்ற, நிலந்தனில் - இடத்திலே பொரு (சுதாயு -(வந்து) போர்செய்து சுருதாயு என்பவன், சற்றுஉம் நின்றிலன்- சிறிதும் முன்நிற்கமாட்டாதவனாயினான்; தன் போர் பொறாமையின் - தனது யுத்தத்தைச்சகிக்கமாட்டாமையால், சகுனியும்-, பெரு சேனை முன்வர தக்க-பெரிய சேனை(தன்) முன்னே வரப் பொருந்திய, சல்லியனும்-, |