ஈண்டினானெய்திநீயேயிவருடன்மலையின்மற்றுன் காண்டகுபோரின்வென்றுகளங்கொளத்தகுமோவென்றான். |
(இ-ள்.) (இங்ஙனம் அருச்சுனனது மயக்கத்தையொழித்து அவனைப் போர்புரியஉடன்படுத்தினபின்பு), அ பொய் இலா மெய்யினான்உம் - அசத்தியமில்லாதசொரூபத்தையுடைய அந்தக் கண்ணபிரானும்.-பாண்டவர் தாம்உம் ஆக -பஞ்சபாண்டவர்கள் உடன்வர, பூண்ட வெம்பரி தேர் மீது - பூட்டிய உக்கிரமானகுதிரைகளுயுடைய தேரின்மேலே, (சென்று), பகீரதி மைந்தன்தன்பால் - கங்கைகுமரனான வீடுமனிடத்து, ஈண்டினான் எய்தி - நெருங்கிச்சேர்ந்து, (அவனைநோக்கி), 'நீஏ இவருடன் மலையின் - (யாவரினுஞ் சிறந்த) நீயே இப்பாண்டவர்களுடன் எதிர்த்தால், காண் தகு உன்போரின்-(யாவரும் அதிசயித்துப்) பார்க்கத்தக்க உனதுயுத்தத்தில், (இவர்கள்), வென்று - (உன்னைச்) சயித்து, களம்கொள தகும் ஓ-போர்க்களத்தை ஆக்கிரமிக்க முடியுமோ? [முடியாதன்றோ],' என்றான்-என்று வினவினான்; (எ - று.) பெரியோரைப்பணிந்து அவரனுமதியும் ஆசியும்பெற்றுப் போர் புரிதலே வெற்றியை விளைக்கு மென்ற நூற்கொள்கை, இங்கு அறியத்தக்கது. பீஷ்மன் தான் நினைத்தபொழுது உயிரைவிடுதல் முதலிய பெருவரங்களைப் பெற்றவனும், யாவராலும் வெல்ல முடியாத பராக்கிரமசாலியுமாதலால், அவனை வெல்லுதற்கு அவனையே உபாயங் கேட்குமாறு, மாயவன் இங்ஙனஞ் சென்று வினாவினான். மெய்யினானும் பாண்டவர் தாமுமாக ஈண்டினான் என்றான்-பால்விரவிச் சிறப்பினால் ஒருமுடிபுஏற்றது; பால்வழுவமைதி: [நன்.பொது.27.] இரண்டாமடியில் தாம், தன் - அசைகள். பகீரதி - பாகீரதீஎன்ற வடசொல்லின்விகாரம். பகீரதசக்கரவர்த்தியாற் பூலோகத்திற் கொணரப்பெற்றதுபற்றிக் கங்கைக்குப் பாகீரதியென்று பெயர். கங்காநதியின் பெண் தெய்வம் பிரமசாபத்தினால் மானுடமகளாய்த் தோன்றியபோது அவ்வாறான சாபத்தினாலேயே சந்தனுவாகப்பிறந்த வருணதேவனுக்கு வீடுமன் புத்திரனாகப் பிறந்தானாதலால், அவனை 'பகீரதிமைந்தன்' என்றார். ஈண்டினான் - முற்றெச்சம். நீயே, ஏகாரம் - உயர்வுசிறப்பு. மற்று-அசை; வினைமாற்றுமாம்: பின்புஎன்றுமாம். காண் - முதனிலைத் தொழிற்பெயர். காண்டகு - காணுதற்குத்தக்கஎன நான்கனுருபாக விரிக்க. களம் வென்றுகொளத்தகுமோ எனமொழிமாற்றியுரைத்தல் நேராம். ஓ-எதிர்மறை. (9) 10.-இதுவும் அடுத்தகவியும் - வீடுமன் தன்னைவெல்லும் உபாயத்தைக் கூறியதைத் தெரிவிக்கும். மற்றவன் றருமராசன்மைந்தனேயவனிக்கெல்லாம் கொற்றவனாகுமென்னைக்கொல்லநீயுபாயங்கேண்மோ அற்றைவெஞ்சமரிற்சீறுமம்பையென்றொருத்திதானே செற்றிடத்தவமுஞ்செய்துசிகண்டியாய்ப்பிறந்துநின்றாள். |
இது முதல் மூன்று கவிகள் - குளகம். (இ - ள்.) (அதுகேட்டு), அவன் - அவ்வீடுமன், '(இனி), தருமராசன் மைந்தன்ஏ - அறத்துக்குத்தலைவனான யமனது குமாரனான |