பக்கம் எண் :

170பாரதம்வீட்டும பருவம்

ஓட-(தோற்று) ஓட, வீமசேனன்-,போர் வென்று - அப்போரில் வெற்றிகொண்டு,
மிகுநிறம் கொள் பை வாகை தாமம் சூடினான் - (அவ்வெற்றிக்கு அறிகுறியாக)
மிகுந்த ஒளியைக்கொண்ட குளிர்ச்சியான வாகைப்பூமாலையைத் தரித்தான்;
(எ-று.)

     தன் என்றது, வீமனை. 'தண்போர் பொறாமையின்' என்றதை
மத்திமதீபமாகக் கொண்டு, சாத்தகியினது போரைப் பொறாமையால் என்று
உரைத்து, சுதாயு நின்றலின் என முன் வாக்கியத்தோடும் கூட்டலாம்.
பெருஞ்சேனை முன் வரத்தக்க - பெரிய சேனைக்குத் தலைவனாய் முன்னே
வரத்தக்க (சௌரிய தைரியங்களையுடைய) எனினுமாம்; பெரிய சேனைக்கு
முன்னே எதிர்த்துவரத்தக்க என்றுங் கொள்ளலாம். சுதாயு - வடசொல் திரிபு;
இவன் - வருணபகவானுக்குப் பந்நவாதையினிடம் பிறந்தவன். கையில்
ஆயுதமில்லாதவன்மேல் தன்ஆயுதம் எறியப்பட்டால் தான்இறக்கும்படியும்,
வேறோருவிதத்திலும் இறாவாதபடியும் வரம் பெற்றவன்.               (238)

5.-நான்குகவிகள்-அருச்சுனனுடையவும் வீடுமனுடையவும்
கடும்போரைக் கூறும்.

உயர்ந்தமேருவோடொத்திலங்குதேருலகளந்ததாள்வலவனூரவே
செயந்தன்மாபெருந்துணைவன்வன்பெருஞ்சேனைதன்னொடுஞ்
                                    சென்றுபற்றினான்
வியந்ததேரின்மேன்முப்புரங்களும்வென்றமீளிபோனின்றவீடும
னியைந்துபோரினுக்கெதிரவில்வலோரிருவர்விற்களுமெதிர்
                                       வளைந்தவே.

     (இ-ள்.) உயர்ந்த மேருவோடு ஒத்து இலங்குதேர் - (எல்லா மலைகளினும்)
உயர்ந்த மகாமேருமலையோடு ஒத்து(ப் பொன்மயமாய்ப் பெரியதாக) விளங்குகிற
தேரை, உலகு அளந்த தாள்வலவன் ஊர - உலகங்களை அளவிட்ட
திருவடிகளையுடைய (கண்ணனாகிய) சாரதி செலுத்த, செயந்தன் மா பெரு
துணைவன்-(இந்திரகுமாரனான) ஜயந்தனது சிறந்த பெருமையுள்ள தம்பியான
அருச்சுனன், வல் பெரு சேனை தன்னொடுஉம் சென்று - வலிய பெரிய
சேனைகளுடனே போய், பற்றினான் - (வீடுமனைத்) தொடர்ந்தான்; வியந்த
தேரின்மேல் - (காண்பவர்) அதிசயித்தற்குக்  காரணமான (சிறந்த பெரிய)
தேரின்மேலே, மு புரங்கள்உம் வென்ற மீளிபோல் நின்ற - திரிபுரங்களையுஞ்
சயித்த பராக்கிம சாலியான சிவபிரான்போல நின்ற, வீடுமன் - அவ்வீடுமனும்,
போரினுக்கு இயைந்து - (அவ்வருச்சுனனோடு) போர்செய்தற்கு உடன்பட்டு, எதிர -
எதிர்நிற்க,(உடனே), வில்வலோர் இருவர்விற்கள்உம் - விற்போரில் வல்லவரான
இவ்விரண்டுபேரின் விற்களும், எதிர் வளைந்த - (ஒன்றுக்கொன்று) எதிரிலே
வளைந்தான்; (எ-று.)

     உயர்தல்-ஓங்குதலும், சிறத்தலும். 'உலகளந்ததாள்வலவன் தேரூர' என்ற
தொடரில் எம்பெருமானது அளவிறந்த ஆற்றலும் அடியவர்க்கெளிமையும்
விளங்கும். செயந்தன் - இந்திரனுக்கு இந்திராணியிடம் பிறந்த புத்திரன்:
இந்திரனுக்குக் குந்தியினிடம்