(பகைவர் படையினின்றும் தன்படையைக்) காத்துக்கொள்கின்றவனென்றுமாம். தாரகன் - அசுரேசன்மகளாகிய மாயையென்னும் பெயர் பெற்ற சுரசையென்பவள் காசியபமகாமுனிவரைக் கூடிப்பெற்ற புத்திரர்மூவரில், சூரபதுமனுக்கும் சிங்கமுகனுக்கும் இளையவன்; யானைமுகத்தோடு பிறந்தவன். சூரபத்மன் தாரகன் சிங்கமுகன் என்ற இம்மூவரும் பரமசிவனைக்குறித்து யாகமுந் தவமுஞ் செய்து அவரருளால் அளவிறந்த வரங்களைப்பெற்றுச் செருக்குற்றுத் தமது குருவாகிய சுக்கிரபகவானது தீய உபதேசத்தால் மற்றும் பல ஆயிரம் அசுரர்களோடு சென்று இந்திரன் முதலிய தேவர்களனைவரோடும் போர்செய்து வென்று பற்பல வகையாக உலகத்தை வருத்தினவளவில், அத்துன்பம் பொறுக்கலாற்றாததேவர்கள் திருக்கைலாயமடைந்து பரமசிவனைத் தொழுது துதி செய்து 'தேவரீரைப்போல ஒரு புத்திரனை யுண்டாக்கி அக்குமாரனால் அசுரர்களையழித்து எங்கள் துன்பத்தைப் போக்கிக் காத்தருளல்வேண்டும்' என்று பிரார்த்திக்க,சிவபெருமான் அவ்வேண்டுகோளுக்கு இரங்கிக் குமாரக்கடவுளை யுண்டாக்கிஅனுப்பியருள, அவர் வீரவாகுதேவர் முதலான சிவபுத்திரர்களோடும் மற்றும் பலலஷம் வீரர்களுடனும் போய் யுத்தஞ்செய்து அவ்வசுரர்க ளனைவரையும்அழித்துத் தேவர்களைக் காத்தருளின ரென்பது கதை. தாரகாசுரனோடுமுருகக்கடவுளுக்குப் போர், அவ்வசுரனுக்கு இருப்பிடமான கிரௌஞ்சகிரியினிடத்திலே நடந்தது. சிவபெருமானைக் குறித்து அரிய தவஞ்செய்து போரில் யாவரையும் வெல்லும் ஆற்றலையும், தான் இறப்பின் தன்னுடைய உடம்பிலுள்ள தாதுக்கள் நவரத்தின மாதல்வேண்டு மென்பதையும் வரமாகப் பெற்ற பலாசுரனென்பவன், இந்திரனைப் போருக்கு அழைக்க இருவர்க்கும் பெரும்போர் நிகழ்ந்தது; அப்போரில் முன்நிற்கமாட்டாது தோற்ற இந்திரன், பின்பு அவனை வஞ்சனையால் வெல்லக்கருதிச்சென்று புகழ்ந்து. குறையிரந்து வேண்டி யாகபசுவாக வரித்து உடன்பட்டுவந்த அவனை யூபஸ்தம்பத்திற்கட்டிக் கொன்றான் என்பது கதை. (240) 7. | கரியணிக்குளெக்கரிகள்புண்படாகடவுதேரிலெத்தேர்கலக்குறா பரிநிரைக்குளெப்பரிதுணிப்புறாபாகர்தம்மிலெப்பாகர்வீழ்கலார் நரனும்வெற்றிகூர்வசுவுமுற்றபோர்நவிலுகிற்கினுநாநடுங்குமா லிருதளத்தினுமிருவரம்பினுமேவுணாதபேரெந்தமன்னரே. |
(இ-ள்.) (அப்பொழுது), கரி அணிக்குள் - யானைவரிசைகளிலே, ஏ கரிகள் புண் படா - எந்த யானைகள்தாம் காயப்படாதவை? கடவு தேரில்-செலுத்தப்படுகிற தேர்வரிசைகளிலே, எ தேர் கலக்கு உறா - எந்தத் தேர்கள்தாம் கலக்க மடையாதவை? பரி நிரைக்குள் - குதிரைப்பந்திகளிலே, எ பரி துணிப்பு உறா- எந்தக் குதிரைகள் தாம் வெட்டுப்படாதன? பாகர் தம்மில் - (இவற்றைச்) செலுத்துபவர்களில், எ பாகர் வீழ்கலார் - எந்தப் பாகர் |