இதுமுதல் ஒன்பதுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் நான்காஞ் சீரும் மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களு மாகிய அறுசீராசிரியவிருத்தம். (245) 2.-தருமபுத்திரன் சேனையோடு போர்க்களங்குறுதல். நெருநலிப்பெருஞ்சேனையோநிலைதளர்ந்ததச்சேனையைப் பொருநிலத்தினிற்புறமிடப்பொருதுமென்றுறக்கருதியே வருநிலத்தெழுந்தூளியால்வானயாறுநீர்வற்றவுந் தருநிலத்துளோர்காணவுந்தருமன்வந்தனன்சமரிலே. |
(இ-ள்.) 'இ பெரு சேனைஒ - (நமது) இந்தப் பெரியசேனையோ, நெருகல் -நேற்று, நிலை தளர்ந்தது - வலிமைநிலை தளர்ச்சியடைந்தது; (ஆதலால் இன்றைக்கு), பொரு நிலத்தினில்-போர்செய்யுமிடத்திலே, அ சேனையை புறம் இட பொருதும் - எதிர்ப்பக்கத்துச் சேனையை முதுகுகொடுக்கும்படி போர்செய்து அழிப்போம்,' என்று உற கருதி - என்று மிகுதியாக எண்ணி,- தருமன்-யுதிட்டிரன்,- வரு நிலத்து எழும் தூளியால் வானம் யாறு நீர் வற்றஉம்-(தன்சேனைகள்) வருகிற பூமியினின்று மேற்கிளம்பும் புழுதிகள் போய்ப்படிதலால் ஆகாசகங்காநதி நீர் வறளவும், தரு நிலத்துஉளோர் காணஉம்-(கற்பக) விருக்ஷங்களையுடைய சுவர்க்கலோகத்திலுள்ள தேவர்கள் (வானத்தில்வந்துபோர்) காணவும், சமரில் வந்தனன்-போர்செய்ய வந்தான்; (எ-று.) கீழ் ஏழாம்போர்ச்சருக்கத்திலே அத்தினத்தில் இருதிறத்துச் சேனையும் வெற்றி தோல்வி அடைந்தது கூறாமல் சமமாக இருந்ததுபோலக் கூறி முடித்த ஆசிரியர், இங்குப்பாண்டவசேனை அந்நாளில் தோற்றதாகவும், கௌரவசேனை வென்றதாகவும் கூறியதனால், இத்தன்மையை அங்கே கூட்டிக்கொள்க. இவ்வாறு கவிகள் எங்கேனும் ஓரிடத்தில் கூறியதை ஏற்றவிடத்துப் பொருத்திக் கொள்ளவேண்டும் மரபைப் பலகாவியங்களிலும் காணலாம். இச்செய்தியை அங்குக்கூறாமல்விட்டது. இங்குக்கூறுவோ மென்ற கருத்தினாலே ஆதல்வேண்டும்: இது-முப்பத்திரண்டுவகை யுத்திகளுள் 'உரைத்தும்' என்றதன்பாற் படும். ஏழாநாளில் கௌரவசேனை வென்றது. அடுத்தகவியிலுங் கூறப்படும் இனி, இத்தனைநாளில் பாண்டவர்கள் போரில்மேம்பட்டு நின்றதுபோல்அல்லாமல் ஏழாநாள் இருதிறத்தாரும் ஒருநிகராகஇருந்ததே துரியோதனாதியர் வென்றதாகக் கூறியதெனின் ஏற்கும். பொருநிலம்-போர்க்களம். மூன்றாமடி-உயர்வுநவிற்சி. (246) 3.-இருதிறத்தாரும் சேனையை வியூகம் வகுத்தல். வென்றுபோனபோர்மேன்மையால்விலோதனப்பணிக்காவலன் இன்றும்வேறுமென்றக்களத்தெண்ணில்சேனையோடெய்தினான் துன்றுகங்கையின்றிருமகன்றூசியூகமுந்துளபமால் வென்றிகூர்பெருஞ்சகடமாம்வெய்யயூகமுஞ்செய்யவே. |
|