பக்கம் எண் :

18பாரதம்வீட்டும பருவம்

யுதிஷ்டிரனே, அவனிக்கு எல்லாம் கொற்றவன் ஆகும் - பூமிமுழுவதுக்கும்
அரசனாவன்; என்னை கொல்ல-, நீ-, உபாயம் கேண்மோ-உபாயத்தைக் கேட்பாயாக;
அற்றை - அந்நாளில் [முன்னொருகாலத்தில் என்றபடி], சீறும் - (என்மேற்)
கோபித்த, அம்பை என்ற ஒருத்தி-அம்பை யென்னும்பேரை யுடைய ஒரு பெண்,
வெம் சமரில்தான்ஏ செற்றிட - கொடிய போரில் தானே (என்னைக்) கொல்லும்படி,
தவம்உம் செய்து - தவத்தையும் பண்ணி, சிகண்டி ஆய் பிறந்துஉம் நின்றாள் -
சிகண்டி யென்னும்பெயருள்ள ராஜகுமாரனாய்ப் பிறந்துமிருக்கிறாள்; (எ - று) -
இப்பாட்டில் 'அவன்' என்னும் எழுவாய், மேல் பன்னிரண்டாங் கவியில் 'என்றனன்'
என்ற வினையைக்கொண்டுமுடியும்.

     பின்னிரண்டடியிற் குறித்த வரலாறு:-காசிராசனது பெண்கள் மூவரைத் தன்
தம்பியான விசித்திரவீரியனுக்கு மணம்புரிவிக்கும் பொருட்டுச் சுயம்வரத்தில் வீடுமன்
வலியக் கவர்ந்து தேரேற்றிக் கொண்டுசெல்லுகையில் அரசர்கள் பலர் எதிர்த்துவந்து
தோல்வியடைய, அவர்களுள் சிறிதுபோரில்முன்னிட்ட சாலுவனிடத்தில்
அம்பையென்பவள் மனத்தைச் செலுத்தியதனால் பிறகு வீடுமன்
அந்தச்சாலுவனிடத்திற் சேருமாறு அவளையனுப்பிவிட, அந்தச் சாலுவன் 'பகைவன்
கவர்ந்துபோன உன்னை யான் கொள்ளேன்' என்று மணம் மறுத்துவிட்டதனால்,
அவள் பின்பு வீடுமனை மணஞ்செய்துகொள்ளும் பொருட்டுப் பலவாறுமுயன்றும்
பயன்படாது போக, பின்னர் அவள் வனஞ்சென்று தவஞ்செய்து அவ்வீடுமனை
மறுபிறவியிற் கொல்லும்படி சிவபெருமானிடம் வரம்பெற்று அக்கினிபிரவேசஞ்
செய்து பாஞ்சால தேசத்தரசனாகிய துருபதராசனிடத்திற் பெண்ணாகப்பிறந்து
சிகண்டியென்றுபெயர்பெற்று ஆணெனவழங்க வளர்ந்தனள்: பிறகு ஸ்தூணனென்ற
யட்சனால் வரமாகத் தனது பெண்தன்மையைமாற்றி ஆண்தன்மை கொடுக்கப்
பெற்றன ளென்பது.

     அற்றை வெம்சமரிற்சீறும் என்பதற்கு - யாற்றொழுக்காக, அந்நாளில் (யான்
பரசுராமனோடு) செய்த கொடிய போரில் (யானே வென்றதனாற்) கோபமுற்றஎன்றும்
உரைக்கலாம். சாலுவனால் மறுக்கப்பட்ட அம்பையென்பாள் பரசுராமனைச்சார்ந்து
தன் கருத்தைத் தெரிவிக்க, அந்த அம்பையின் வேண்டுகோளை நிறைவேற்றுவிக்கக்
கருதிப் பரசுராமன் வீடுமனோடுபொருது தோற்றன னென்க. தருமராசன் என்ற
சொற்போக்கு- 'தந்தையையொப்பான் மைந்தன்' என்றபடி இவனும் தருமநெறி
சிறிதுந்தவறாதவ னென்பதை விளக்கும். ஏ-பிரிநிலை. உம்மைகள் - முறையே
எதிரதும் இறந்ததுந் தழுவிய எச்சம்.                                (10)

11,பன்னுசீரியாகசேனன்குமரனைப்பத்தாநாளில்
என்னெதிரமரிற்காட்டிலியான் படையாவுந்தீண்டேன்
பின்னவன்வெகுண்டுசெய்யும்பெருமிதங்கண்டுமீண்டு
கன்னனைவெல்லநின்றகாளைகைக்கணையால்வீழ்வேன்.

     (இ - ள்.) பன்னு - (யாவராலும்) எடுத்துச்சொல்லப்படுகிற, சீர் -புகழையுடைய,
யாகசேனன் குமரனை - துருபதராசனது