மழிந்து, குருகுலம் பெரு குரிசில் நின்ற உழி-குருகுலத்துப் பெரிய அரசனான வீடுமன் நின்றவிடத்தில், குறுகினான் - சேர்ந்தான். கந்தரம் - தலையைத் தரிப்பது; கம் - தலை: கழுத்தின் பெயர் இங்கே தலைக்கு இலக்கணை. (251) 8.- இதுவும், மேற்கவியும்-ஒருதொடர்: துரியோதனன் வீடுமனிடம் சிலகூறிப் புலம்பலைத் தெரிக்கும். தன்பிதாமகன்செய்யதாடனதுமௌலிமேல்வைத்துநின் றுன்பிதாவின்மேலன்பினாலுலகமும்பியர்க்குதவுவா யென்பிதாவுநீயாயுநீயென்றிருந்தனனெம்பிமார் முன்பிதாமருத்தென்னுமம்முதல்வனான்முடிவெய்தினார். |
(இ-ள்.) (துரியோதனன்), தன் பிதாமகன்-தனது (பெரிய) பாட்டனான வீடுமனது, செய்ய தாள் - சிவந்தபாதங்களை, தனது மௌலிமேல் வைத்து - தனது தலையின்மேல் சூடி [வணங்கி], நின்று - (அருகில்) நின்று, (அவனைநோக்கி), 'உன் பிதாவின் மேல் அம்பினால் - உனதுதந்தையினிடத்து அன்பினாலே, உலகம் - இராச்சியத்தை, உம்பியர்க்கு - உன் தம்பிமார்களுக்கு, உதவுவாய் - கொடுத்தவனே! என் பிதாஉம் நீ - எனக்குத் தந்தையும் நீயே; யாய்உம் நீ - என்தாயும் நீயே, என்று இருந்தனன் - என்றுகருதியிருந்தேன்; (இப்படியிருக்கையில்), எம்பிமார் - என்தம்பியர், முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் - முன்னே (இவனைப்) பெற்றதந்தை வாயு வென்று கூறப்படுகிற அந்தப்பெரியவீமனால், முடிவு எய்தினர் - அழிவையடைந்தார்கள்; (எ - று.)-இப்பாட்டில், வைத்துநின்று' என்பதற்கு. அடுத்தபாட்டில் "வேந்தர் வேந்து" - எழுவாய். வைத்துநின்று "என உரைசெய்தான்" என்க. இரண்டாமடியில், உன்பிதாஎன்றது-சந்தனுவையும், உம்பியர் என்றது- சித்திராங்கதனையும், விசித்திரவீரியனையுங் குறிக்கும். முதல் மனைவியான கங்கை வீடுமனைப் பெற்றுச் சந்தனுவைவிட்டு நீங்கியபின், சந்தனு, செம்படவன் வளர்த்த மகளாகிய பரிமள கந்தியென்பவளைக் கண்டு காமுற்று மணம்பேச, அவள்தந்தை 'மநுநீதிமுறைப்படி மூத்தமனைவியின் குமாரன் அரசாள, என்மகளுக்குப் பிறக்கும் பிள்ளை அரசின்றிக் கீழ்மைப்பட்டிருப்பானாதலால், நான் உனக்கு மகனைக் கொடேன்" என்று சொல்ல அதை அறிந்த பீஷ்மன், தந்தைக்கு மணஞ்செய்வித்தற் பொருட்டு, தான் மணஞ்செய்து கொள்வதில்லை யென்றும், இராச்சியத்தைத் தன் தம்பிக்கே கொடுப்பதாகவும் தேவர்கள் முன்னிலையில் பயங்கரமான சபதஞ் செய்து, அம்மகளைத் தந்தைக்கு மணஞ்செய்வித்து, பின்பு அவளுக்குப் பிறந்த சித்தி ராங்கதன் விசித்திரவீரியன் என்பவர்க்கே முன்னைய வாக்குப்படி அரசாட்சியைக் கொடுத்தானென வரலாறு அறிக. இவ்வாறு தம்பியரிடத்தில் மிகுந்தஅன்புகொண்ட நீ, அவர்களில் ஒருவனுக்குப் பௌத்திரனான என்னை உபேக்ஷிக்கலாமோ? உன் தம்பியர்உனக்குந் அருமையாயிருந்ததுபோல, என தம்பியர் எனக்கும் அருமை |