செல்வம் - (வீரர்க்குச்) சிறப்பாம்; (எ-று.)- அம்மா - ஈற்றசை; இவ்வுண்மையை உணராமல் துரியோதனன் துன்பமுற்றதைப் பற்றிய வியப்பை நன்கு விளக்கும் இடைச்சொல்லுமாம். போரிற் படையெடுத்துச் சென்றால், வெற்றியுந் தோல்வியும் ஒருவர் பங்கன்று; போரிற் பகைவரை வெல்லுதல்போலவே, பகைவரால் இறத்தாலும் வீரர்க்குச் சிறப்பேயா மென்பதாம், பௌத்திரனை 'ஐய' என்றது - மரபுவழுவமைதி, போய் என்ற வினையெச்சம் - சாகாது என்பதில் சா என்ற பகுதியைக் கொள்ளும். கிடப்பதே, ஏ - பிரிநிலை. இதுமுதற் பதினான்கு கவிகள் - ஒன்று நான்காஞ்சீர்கள் விளச்சீர்களும் மற்றவை மாச்சீர்களுமாகிவந்த அறுசீராசிரியவிருத்தங்கள். (254) 11. | இருந்தனம்படைத்தமாக்களின்பமுமறனுமஞ்சார் விருந்தெதிர்சிறிதுமஞ்சார்மேம்படவாழுமில்லோர் பொருந்தியவிறப்பையஞ்சார்போதமெய்யுணர்ந்தமாந்தர் அருந்தவமுனிரவரஞ்சாரசருமடுபோரஞ்சார். |
(இ-ள்.) இரு தனம் படைத்த மாக்கள்-மிகுந்த செல்வத்தைப்பெற்ற மனிதர்கள்.இன்பம்உம் அறன்உம் அஞ்சார்-(அதைச் செலவழித்துத்தாம்) இன்பமடைதற்கும்(பிறர்க்குத்) தருமஞ்செய்தற்கும் பின் வாங்கமாட்டார்கள்; மேம்பட வாழும்இல்லோர் - மேன்மையாக இல்லறத்தில் வாழ்பவர், விருந்து எதிர் சிறிதுஉம்அஞ்சார்-விருந்தினரை யெதிர்கொள்ளுதற்குச் சிறிதும் பின்னிடமாட்டார்கள்;போதம்மெய் உணர்ந்த மாந்தர்-ஞானத்தால் தத்துவப்பொருள்களை யறிந்தமனிதர்கள், பொருந்திய இறப்பை அஞ்சார்- (இயல்பாகப்) பொருந்தியமரணத்துக்குப் பயப்படமாட்டார்கள்; முனிவர்-இருடிகள், அரு தவம் அஞ்சார்-(செய்வதற்கு) அருமையான தவத்தைச் செய்வதற்கு வருந்தமாட்டார்கள்;(அவ்வாறே), அரசர்உம் அடு போர் அஞ்சார்- அரசர்களும்கொலைக்கிடமானபோர்த்தொழிலுக்கு அஞ்சமாட்டார்கள்; (எ-று.) போதமெய்யுணர்தல் - நிலையாகவுள்ள பொருள்கள் நிலையில்லாத பொருள்கள் என்பவற்றின் தன்மையை உள்ளபடியறிதல்; இதுவே தத்துவஞானம.் -தநம், போதம் - வடசொற்கள். விருந்து-புதுமை; புதியராாய்வந்தவர்க்குப் பண்பாகுபெயர். எதிர்-எதிர்கொள்ளுதல்: முதனிலைத்தொழிற்பெயர். ஆறிலுஞ்சாவு நூறிலுஞ்சாவு' என்றபடி பிறந்தவுயிர் எப்பொழுதாயினும் இறத்தல் நிச்சயமாதலால், 'பொருந்தியஇறப்பு' என்றது. அரசர் அடு போரஞ்சாரென்று சொல்லவேண்டிய இடத்து, அப்ரஸ்துதமாகத் தனம்படைத்தார் இன்பமும் போகமுமஞ்சார் முதலிய அஞ்சாமையுடையவரையெல்லாஞ் சேர்த்து 'அஞ்சார்' என்பதைப் பலமுறை கூறியஇது- (சொற்பொருட்பின்வந்ததீபகவணி.) (255) 12.. | இன்னமொன்றுரைப்பக்கெண்மோவிருசெவிக்கேறாதேனு முன்னரசாண்டவேந்தர்முறைமையிற்சிதைந்ததுண்டோ |
|