(இ-ள்.) ஐயா - ஐயனே! கால் வரு - காற்றுப்போல (வேகமாக) வருகிற, கவனம் -நடையையுடைய, மான் - குதிரைகளைப் பூட்டிய, தேர் - தேரைச் செலுத்தலில்வல்ல, கன்னன்உம் - கர்ணனும், கன்னம்பாகம்- கன்னங்களினிடத்திலே, மால் வரு - மிகுதியாகவழிகிற, கலுழி-கலங்கல்நீராகிய மதசலத்தையுடைய, வேகம் - உக்கிரத்தன்மையுள்ள, மா - யானையைச் செலுத்துதலில், வலான் - வல்லவனாகிய, சகுனிதான்உம்-, நூல் வரு பழுது இல் கேள்வி - நூற்களிலே பொருந்திய குற்றமில்லாத கேள்விகளையுடைய, நும்பிஉம் நீஉம் - உன்தம்பியான துச்சாதனனும் நீயும், இந்த நால்வர்உம் - இந்த நாலுபேரும், குறித்த - முன்பு எண்ணின, எண்ணம் - தீயசிந்தையின் பயன், நாளைஏ தெரியும் - நாளைக்கே தெரிந்துவிடும்; (எ-று.)-நாளையே தெரியும் - விரைவிலே உங்களுக்கு முழுவதும் அழிவுண்டாமென்றபடி. பெரியோர்கள் பலர் சாஸ்திரங்களிலுள்ள நீதிகளை எடுத்துச் சொல்லக்கேட்டும் இயல்பான துர்க்குணத்தை விடாத இழிவு தோன்ற, 'நூல்வருபழுதில் கேள்வி நும்பியும் நீயும்' என்றார்; இனி, இகழ்ச்சியுமாம். முன்னிலையோடு படர்க்கையை உளப்படுத்தி முன்னிலையாக முடியாமல் 'நால்வர்' எனப் படர்க்கையாற் குறித்தது. இடவழுவமைதி. வழாநிலையாயின், 'நால்விர் எனநிற்கும். இவர்கள் குறித்த எண்ணம் - பாண்டவரைப் பலபடியாலும் கெடுத்தல், கால்வரு - கால்களாற் பாய்ந்துவருகிற என்றுமாம். இதைத் தேருக்கு அடைமொழி யாக்கினால், சக்கரம்பொருந்திய என்று பொருள். 'தேர்கண்ணன்' என்றதில், கர்ணன்தேர்ப்பாகன்மகனென்ற இழிவும் தோன்றும். கன்னன்முதலியநால்வர் துஷ்டசதுஷ்டரெனப்படுவர், நாளையே, ஏ - தேற்றம். (257) 14. | விதுரனும்வெஞ்சொலாற்றன்வில்லினையொடித்துநின்றான் அதிரதனானாலன்றியங்கர்கோனமரில்வாரான் முதிர்படைவிசயன்வீமன்மூண்டமர்புரியுங்காலை யெதிரினிநானுநீயுமல்லதிங்கிலக்குவேறார் |
(இ-ள்.) விதுரனும்-, வெம் சொல் ஆற்றான் - (உனது) கடுஞ்சொல்லைப் பொறுக்கமாட்டதவனாய், வில்லினை ஒடித்து நின்றான் - வில்லை யொடித்துப் போய்நின்றான்; அங்கர் கோன்-கர்ணன், அதிரதன் ஆனால் அன்றி - (தன்னை) அதிரதனாக வைக்காமற்போனால், அமரில் வாரான் - போரில் வரமாட்டான்: இனி - இனிமேல், முதிர் படை - மிகப்பயின்ற ஆயுதங்களையுடைய, விசயன் வீமன் - அருச்சுனனும் பீமனும், மூண்டு - கோபத்தோடு வந்து, அமர் புரியும் காலை - போர்செய்யும்பொழுது, எதிர் - (அவர்களை) எதிர்க்கவல்லவர், நான்உம் நீஉம் அல்லது - நாம் இருவருமே யல்லாமல், இங்கு - இந்தப்பக்கத்தில், இலக்கு வேறு ஆர் - (அவர்களுக்கு எதிர்க்கும்) குறியாய்நிற்பவர் வேறுயாவர்? [எவருமில்லையேன்றபடி]; (எ-று.) அருச்சுனனையும் வீமனையும் ஒருங்கே எதிர்க்கும் வல்லமை யுடையானென்று தன்னாற் கருதப்பட்ட விதுரனும், அவ்வாறே |