பக்கம் எண் :

190பாரதம்வீட்டும பருவம்

றனன்-; கொன்றான் ஆக - கொல்ல, குருகுலத்து அரசன் சேனை-துரியோதனனது
சேனை, அரக்கன் வென்றனன் என்று - இராக்கதன் சயித்திட்டான்
என்றகாரணத்தால், விரி கடல் போல ஆர்த்தது - (பிரளயகாலத்துப்) பொங்குங்
கடல்போல ஆரவாரித்தது; அன்று அவன் அடர்த்த மாயம் - அப்பொழுது அந்த
இராக்கதன் போர் செய்த மாயையை, அடர்க்க வல்லார் ஆர்கொல்ஓ-எதிர்த்துப்
போர்செய்து அழிக்கவல்லவர் யாவர் உளர்? (எ - று.)-மாயையால் மிகவும்
உக்கிரமாகப் போர்செய்தனனென்றபடி. ஈற்றடி - கவிக்கூற்று.            (267)

வேறு.

24.-அசுவத்தாமனும் துரோணனும்,
பாஞ்சாலர்பலரும் தோற்கப் பொருதல்.

பூஞ்சா யகன்கைப் பொருசாபம்பொ சிந்து கண்ணாற்
றீஞ்சா றுபாயுஞ் செழுநீர்வயற் செந்நெல் வேலிப்
பாஞ்சா லநாடர் பலரும்படப் பாணம் விட்டார்
தாஞ்சா பம்வாங்கி மறைமைந்தனுந் தந்தை தானும்.

     (இ - ள்.) பூ சாயகன் - மலர்களை அம்பாகவுடைய மன்மதனது, கை -
கையிலேயுள்ள, பொரு சாபம் - போர்செய்தற்குரிய வில்லாகிய கரும்புகள்,
கண்ணால் - கணுக்கள்தோறும், தீம் சாறு பொசிந்து பாயும் - இனிமையான
இரசம்ஊறிப்பெருகப்பெற்ற, செழு நீர் வயல் - மிகுந்த நீர்வளத்தையுடைய
கழனிகளையும், செந்நெல் வேலி - செந்நெற்பயிர்நிலங்களையுமுடைய, பாஞ்சால
நாடார் பலர்உம் - பாஞ்சாலதேசத்து அரசர்கள் பலரும், பட - தோற்கும்படி,
மறைமைந்தன்உம் தந்தைதான்உம் - வேதம்வல்ல குமாரனான அசுவத்தாமனும்
(அவனது) தந்தையாகிய துரோணாசாரியனும், தாம் சாபம் வாங்கி - தாங்கள்
வில்லை  வளைத்து, பாணம் விட்டார்-அம்பு தொடுத்தார்கள்; (எ-று.)

     பாஞ்சாலநாடர் - யாகசேனன், திட்டத்துய்மன் முதலியோர்; இவர்களுக்கும்
துரோணஅசுவத்தாமர்களுக்கும் ஒருவரோடொருவர் பழமையாகவே
பகைமையுள்ளது, பிரசித்தம். கணுக்களினின்று சாறுபெருகுதலைக் கண்களால்
நீர்பெருகுதலாகக் கற்பிக்கக் கருதி, 'கண்ணால் தீஞ்சாறு பாயும்' என்றார்போலும்,
செழு நீர்-செழிப்பான தன்மையையுடைய என்றுமாம். வேலி-ஊர்சூழ்ந்த கழனி,
மன்மதனது அம்புகள் தாமரைமலர், அசோகமலர், மாமலர், முல்லைமலர்,
நீலோற்பலமலர் என்னும் ஐந்துமாம். கரும்புகளில் தானாகவே சாறுபெருகிற
தெனச்செழிப்பு விளக்கியவாறு. கண்ணால், 'ஆல்' உருபு - தோறும் என்னும்
பொருளுடையது.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவும் பதினாறு பாடல்கள் - பெரும்பாலும்
மூன்றாஞ்சீரொன்று மாங்கனிச்சீரும் மற்றைநான்கும் மாச்சீர்களுமாகிய நெடிலடி
நான்கு கொண்ட கலிநிலைத்துறைகள்.