பக்கம் எண் :

எட்டாம் போர்ச்சருக்கம்191

25.-அபிமன்யு இராவானிறந்ததுகேட்டுப் பலமன்னர்கெடக்
கடும்போர் புரிதல்.

பட்டான்றுணைவனெனக்கேட்டுப்பரிவுபொங்க
விட்டான்மணித்தேர்வளைத்தான்றனிவெய்யசாபந்
தொட்டான்பகழியபிமன்னுதொடுத்தலோடுங்
கெட்டாரரசன்பெருஞ்சேனையிற்கேடில்வேந்தர்.

     (இ-ள்.) (பின்பு). அபிமன்னு-, துணைவன் பட்டான் என கேட்டு-(தன்)
உடன்பிறந்தவனான இராவான் இறந்தானென்று சொல்ல (அச்செய்தியை)க்
கேட்டறிந்து, பரிவு பொங்க - துயரம் மிக, மணி தேர் விட்டான்-அழகிய(தன்)
தேரை(ப் பகைவர் சேனையிற்) செலுத்தி, தனி வெய்ய சாபம் வளைத்தான் -
ஒப்பற்ற கொடிய (தன்)வில்லை வளைத்து, பகழி தொட்டான் -அம்புகளைத்
தொடுத்தான்; தொடுத்தலோடும் - (அங்ஙனம்) செலுத்தினவளவிலே, அரசன்
பெருசேனையில் கேடு இல் வேந்தர் - துரியோதனராசனது பெரிய சேனையிலுள்ள
குற்றமில்லாத அரசர்கள், கெட்டார் - தோற்றார்கள்; (எ-று.)

     இதுவரையிலும் எந்தப்போரிலும் பங்கப்படாதவ ரென்பார், 'கேடில் வேந்தர்'
என்றார். இராவான், அபிமன்னு என்ற இருவரும் அருச்சுனனது குமார ராதலால்,
இராவானை அபிமன்னுவின்துணைவ னென்றது.                        (269)

26.-மைந்தனிறந்ததுகேட்டுச் சீறி வீமன் பொர நடத்தல்

மைந்தன்களத்தின்மடிந்தாரெனவாயுமைந்தன்
தந்தம்பறியுண்டெதிர்சீறியதந்தியென்ன
வெந்தங்கமுற்றுமனந்தீயெழமேனடந்தான்
சிந்தந்திகழவெழுதுந்திறற்சிங்கமன்னான்.

     (இ-ள்.) சிந்தம் - (பகைவர்) வெல்லப்படுந்தன்மை, திகழ - விளங்க,
எழுதும்-(தன்கொடியில்) எழுதப்பட்ட, திறல் சிங்கம்- வலிமையையுடைய
சிங்கத்தை,அன்னான்-ஒத்தவனாகிய, வாயுமைந்தன் - வாயுகுமாரனான வீமன்,
மைந்தன்களத்தில் மடிந்தான்  என - (தன் தம்பியாகிய) அருச்சுனனது)
புத்திரனானஇராவான் போர்களத்தில் இறந்தா னென்று அறிந்து,-தந்தம்
பறியுண்டு எதிர் சீறியதந்தி என்ன-(தன்) தந்தம் (பகைவரால்) பறிக்கப்பட்டு
அவரெதிரிலேகோபங்பொண்டு போருக்குச் சென்ற யானைபோல, அங்கம்
முற்றுஉம் வெந்து-(அவனிறந்ததனாலாகிய சோகத்தால்) உடம்புமுழுவதும்
தவித்து, மனம் தீ எழ -மனத்தில் கோபாக்கினி கொதிக்க, மேல் நடந்தான் -
(பகைவர்சேனை) மேல்(போருக்குச்) சென்றான்; (எ-று.)

     வீமனுக்கு இராவானிடம் உள்ள அன்பை விளக்க, 'தம்பி மைந்தன'்
என்னாது, 'மைந்தன்' என அபேதமாக் கூறியது. சிங்கக் கொடியானுக்குச்
சிங்கத்தையே உவமைகூறினார். யானைக்குத் தந்தம்போல, வீமனுக்கு இராவான்
சிறந்த அங்க மென்க. தந்த