29.- வீமன் சூழ்ந்தோரை வலிகெடுத்துத் துரியோதனன்தம்பிய ரெழுவரை மாய்த்தல். எடுத்தானொருதன்சிலைவீமனுமெண்ணில்பாணந் தொடுத்தானவர்மேலிமைப்போதையிற்சூழ்ந்துளோரைக் கெடுத்தானரசற்கிளையோரெதிர்கிட்டிமீண்டும் படுத்தானெழுவரிவன்வாளியிற்பட்டுவீழ்ந்தார். |
(இ-ள்.) (அப்பொழுது), வீமனும்-, தன் ஒரு சிலை எடுத்தான். தனது ஒப்பற்றவில்லையெடுத்து, அவர்மேல் எண் இல்பாணம் தொடுத்தான் - அவ்வரசர்கள்மேல்அளவில்லாத அம்புகளைத்தொடுத்து, இமைப்போதையின் - ஒருநொடிப்பொழுதினுள்ளே, சூழந்துஉளோரை கெடுத்தான்-(தன்னை) வளைந்துள்ளஅவர்களையெல்லாம் நிலைகெடுத்து, அரசற்கு இளையோர் எதிர் கிட்டி -துரியோதனன் தம்பிமார்களின் எதிரிலே சமீபித்து, மீண்டும் எழுவர்படுத்தான்-மறுபடியும் (அவர்களில்) ஏழுபேரை அழித்தான்; (அவர்கள்) இவன் வாளியின்பட்டு வீழ்ந்தார்-இவனது அம்புகளால் இறந்து விழுந்தார்கள்; (எ - று.) எழுவர்பெயர், மேற்கவியிற் கூறப்படும். கீழ் இச்சருக்கத்து ஐந்தாங்கவியை நோக்கி, 'மீண்டும்' என்றார். போதை - ஐயீற்றுடைக் குற்றுகரம். (273) 30.-இரண்டுகவிகள் - துரியோதனன்தம்பியர் எழுவர்தலை வானிற் சென்றது கூறும். அறமிக்கசொற்குண்டலபோசனனாதியக்கன் திறமிக்கதீர்க்கநயனன்சிலைத்திம்மவாகு மறமிக்கவேற்குண்டலன்குண்டலதாரன்மன்னூற் றுறைமீக்ககேள்விக்கனகத்துசனானதோன்றல். |
இதுவும், மேற்கவியும்-குளகம். (இ-ள்.) அறம் மிக்க சொல், தருமம்மிகுந்த சொற்களையுடைய, குண்டலபோசன்-, அனாதியக்கன்-, திறம் மிக்கவலிமை மிகுந்த, தீர்க்கநயனன்-, சிலை-வில்லில்வல்ல, திம்மவாகு-, மறம்மிக்க- பராக்கிரமம்மிகுந்த, வேல் - வேலில்வல்ல, குண்டலன்-, குண்டலதாரன்-, மன் நூல் - நிலைபெற்ற சாஸ்திரங்களின், துறை - வழிகளிலே, மிக்க-மிகுந்த, கேள்வி-கேள்விகளையுடைய, கனகத்துசன் ஆன தோன்றல்-கநகத்வஜனாகிய அரசன்,-(எ-று.) குண்டபேதன், அநாத்ருஷ்டி, தீர்க்கலோசநன், தீர்க்கபாகு, சுபாகு, வைராடன், கநகத்வஜன் என்று இவர்கள்பெயர் முதனூலிற் காணப்படுகிறது. தீர்ககநயநன் என்பது - நீண்டகண்களையுடையா னென்றும், குண்டலதாரன் என்பது குண்டலந்தரிப்பவனென்றும், கநகத்வஜன் என்பது-பொற்கொடியையுடையானென்றும் பொருள்படும். அறம்-தீங்குமாம். பி-ம்: கருடத்துசனானதோன்றல். (274) |