31. | இப்பேரெழுவர்சிரமேழுமெழுந்துதுள்ளி மைப்பேரெழிலியகல்வானிடைவந்தவெல்லை ஒப்பேதெனவாசவன்கேட்டலுமோங்கல்விந்தை கைப்பேரெழிற்பைங்கழங்கென்றனர்கண்டவானோர். |
(இ-ள்.) இ பேர் எழுவர் - இந்தப்பேரையுடைய ஏழுபேர்களின், சிரம் ஏழ்உம் - (வீமனால்அறுபட்ட) தலைகள் ஏழும், எழுந்து துள்ளி - (உடம்பைவிட்டு) எழும்பிக்குதித்து, மை பேர் எழிலி அகல் வானிடை-கரியபெரிய மேகங்களையுடைய பரந்த ஆகாயத்திலே, வந்த எல்லை - வந்தபொழுது,- வாசவன்-இந்திரன், ஒப்பு ஏது என கேட்டலும் - (இவற்றிற்குச்) சமானம் எது வென்று கேட்டவளவிலே,-கண்ட வானோர் - பார்த்துநின்ற தேவர்கள், 'ஓங்கல் விந்தை-உயர்ச்சியையுடைய வீரமகளது, கை-கையினால் (எடுத்து) ஆடப்படுகிற, பேர்-பெரிய, எழில் -மேலெழுதலையுடைய, பைங்கழங்கு - அழகிய அம்மனைக்காய்கள் (இவற்றிற்கு உவமை)', என்றனர் - என்று சொன்னார்கள்; (எ-று.) ஓங்கல் விந்தை - மலைகளிற் சஞ்சரிக்குந் துர்க்கையுமாம். ஓங்கல்- உயர்வென்னும் பொருளில் தொழிற்பெயரும், மலையென்னும்" பொருளில் தொழிலாகுபெயருமாம். போர்க்களத்துக்குத் தலைவி துர்க்கை யாதலாலும், பராக்கிரமத்திற்குஉரியவள் வீரமகளாதலாலும், இவர்களாடிய கழங்கென்று அத்தலைகளைக் கூறுதல் ஏற்கும், விந்தியமலையில் வீற்றிருத்தல்பற்றி, துர்க்கைக்கு'விந்தை' என்று பெயர்; 'விந்த்யவாஸிநீ' என்ற வடமொழிப் பெயருங் காண்க. (275) 32.-துரியோதனன் வீமனுக்குப் புறந்தருதல். அறந்தந்தவாழ்க்கைமுடிக்கின்றனையாகிநீயும் இறந்தந்தரத்திலினியேகுகவென்றுசீறி மறந்தந்தசீயக்கொடியோன்கொடிமாசுணத்தோன் புறந்தந்தபோரிற்புறந்தந்தனன்போகலுற்றான். |
(இ-ள்.) மறம் தந்த - பராக்கிரமம் பொருந்திய, சீயம் - சிங்கத்தின் வடிவமெழுதிய, கொடியோன் - துவசத்தையுடைய வீமன்,-(பின்பு துரியோதனனைநோக்கி), 'அறம் தந்த - (பலர்க்குத்) தீங்கு செய்த வாழ்க்கை - (உனது)உயிர்வாழ்வை, முடிக்கின்றனை ஆகி - ஒழிக்கிறவனாய், நீயும்-, இனி - இப்பொழுது, இறந்து-, அந்தரத்தில் ஏகுக- வீரசுவர்க்கத்துச் செல்வாயாக,' என்று - என்று சொல்லி, சீறி-கோபிக்க-கொடி மாசுணத்தோன் - பாம்புக் கொடியையுடைய அத்துரியோதனன், புறந்தந்த போரில் - (தான் இதுவரையில்) பாதுகாத்துவந்த அந்தயுத்தத்திலே, புறந்தந்தனன் போகல் உற்றான் - முதுகுகொடுத்துச் செல்லத் தொடங்கினான்: (எ-று.) அறம் - தீமையாதலை 'அறம்பாடுதல்' என்னுமிடத்துங் காண்க. அறம் - (நன்மை) அறுதல்; தொழிற்பெயர். இனி, அறம் தந்தவாழ்க்கை என்பதற்கு- முற்பிறப்பின் நல்வினையினாலாகிய |