கலன் - ஆபரணங்களை, போலும் - ஒக்கும்; பிளவு உற்ற-பிளக்கப் பெற்ற, வேழம்நுதல் - யானைகளின்நெற்றிகள், (முத்துக்களையுடைமையால்), நித்திலம் பெட்டிபோலும் - (தருமன் பூமியாகிய பெண்ணை மணஞ்செய்யப் பரிசு கொடுக்கும்)முத்துப்பெட்டியை ஒக்கும்; (எ-று.) தலமானை வதுவைசெய்தல் என்றது, இராச்சியாபிஷேகஞ் செய்து கொள்ளுதலை. பூமியைப் பெண் என்றதற்கு ஏற்ப, பெண்ணுக்குரிய 'தளவொத்த மூரல்' என்ற அடைமொழியைக் கொடுத்தார். தன்மைத்தற்குறிப்பேற்றவணி. 'தளவொத்த.....அளித்த' என்பதை, நித்திலப்பெட்டிக்குங் கூட்டுக. தளவு - முல்லை; பூவுக்கு முதலாகுபெயர்: இது - வெண்ணிறத்திலும் அழகிலும், மகளிர் பற்களுக்கு உவமை. மான் - பெண்ணுக்கு உவமையாகு பெயர்; மான்போன்ற பார்வையுடையவள், நித்திலப்பெட்டி-நித்திலங்களை வைத்துள்ளபெட்டி, சிறந்த யானைகளின் தலையிலிருந்து முத்து உண்டாகுமென்பது, நூற்கொள்கை. (278) 35. | பூட்டற்றவில்லின்மிசைசோரிப்புனலின்வீரர் வாட்டற்றவீரல்பலசுற்றிவயங்குதோற்றம் வேட்டற்பொருட்டாற்புவிமானுக்குவேந்துசூட்டுஞ் சூட்டற்றுமுற்றுங்குடர்வாசத்தொடையலற்றே. |
(இ-ள்.) சோரி புனலின் - இரத்தப்பெருக்கிலே, (இறந்து விழுந்த), வீரர் வீரர்களது, வாட்டு அற்ற - மெலித லில்லாத (கொழுத்துள்ள), ஈரல் பல - ஈரல்கள் அநேகம், பூட்டு அற்ற வில்லின்மிசை - (நாணியின்) கட்டு அறுந்துவிழுந்துள்ள வில்லின் மேலே, சுற்றி வயங்கு-சூழ்ந்துகொண்டு விளங்குகிற, தோற்றம் - காட்சி,- வேட்டல் பொருட்டால் - கலியாணஞ்செய்துகொள்ளும் நிமித்தமாக, புவி மானுக்கு - பூமிதேவிக்கு, வேந்து சூட்டும் - யுதிட்டிரன் சூட்டுகிற, சூட்டு - நெற்றிச்சூட்டை, அற்று-ஒக்கும்; குடர் முற்றுஉம்- (அருகில்விழுந்துள்ள) குடல் முழுவதும், வாசம் தொடையல் அற்று - (விவாகஞ் செய்யும்பொருட்டுப் பூமிதேவிக்கு யுதிட்டிரன் சூட்டிய) வாசனையையுடைய மணமாலையை ஒக்கும்; (எ-று.) இதுவும் - தன்மைத்தற்குறிப்பேற்றவணியே. நாணியற்றுச் சிறிது வளைவுபடத் தரையில் விழுந்துகிடக்கிற வில்லின்மேல் ஈரல் சூழ்ந்து விளங்குதல் -பூமிதேவியின் வளைவான நெற்றியில் வட்டமாகச் சூட்டிய பூமாலைபோலுமென்றும், தரையிலே நீண்டுபரந்து விழுந்து கிடக்கிற குடல் பூமிதேவியின்தோளிலிட்ட பூமாலைபோலுமென்றும் வருணித்தார். சூட்டப்படுவது சூட்டு: நெற்றிமேல் வட்டமாக அயியும் மாலை, தொடுக்கப்படுவது-தொடையல்; மார்பிலிடும்மாலை. வாட்டு - முதனிலை திரிந்த தொழிற்பெயர். 36. | குலமாநிருபருடல்சோருங்குருதிவெள்ளம் பலமாநதிபோய்த்திரைவேலையிற்பாய்ந்ததோற்றம். |
|