பக்கம் எண் :

2பாரதம்வீட்டும பருவம்

னென்கிற அரசன், இவ்வில்லிபுத்தூராரது கல்வி கேள்வித் திறமைகளைக்
கேள்வியுற்று இவரை வரவழைத்து அநேக சன்மானங்கள்  செய்து தனது
ஆஸ்தாநபண்டிதராக அமைத்துவைத்து, ஒருநாள் இவரை நோக்கி 'வடமொழியில்
ஸ்ரீவேதவியாசமகாமுனிவரால் விரித்துரைக்கப்பட்ட மகாபாரத சரித்திரத்தைச்
செந்தமிழில் விருத்தப் பாடல்களினால் ஒருபெருங் காப்பியமாகப் பாடித்
தந்தருளல்வேண்டும்' என்று பிரார்த்திக்க, இவர் க்ருஷ்ணனுடைய சரித்திரம்
ஆங்காங்குவருவதுபற்றி அவ்வேண்டுகோளுக்கு இசைந்து மகாகாவியமாகச்
சொற்சுவை பொருட்சுவைகள் மிக்கு விளங்கும்படி நல்ல நடையிலே அதனைப்
பாடியருளினார்.

     இவர், தம்காலத்திற் கல்விச்செருக்கு அடைந்திருந்த புலவர்கள் பலரையும்
தமது வித்தியாசாமர்த்தியத்தால் வென்று, அவ்வெற்றிக்கு அடையாளமாக,
தோற்றுப்போன புலவர்களின் காதுகளைத் தமதுகையிலே எப்பொழுதும்
ஆயுதமாகவைத்துக் கொண்டுள்ள துறட்டுக்கோலால் மாட்டியிழுத்து அறுத்துவந்தன
ரென்பது, ''குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னீங்கில்லை குறும்பியளவாக் காதைக்
குடைந்து தோண்டி, யெட்டினமட் டறுப்பதற்கோ வில்லியி
ல்லை
யிரண்டொன்றாமுடிந்து தலையிறங்கப்போட்டு, வெட்டுதற்கோ கவி யொட்டக்கூத்த
னில்லைவிளையாட்டாக் கவிதைதனை விரைந்துபாடித், தெட்டுதற்கோ அறிவில்லாத்
துரைகளுண்டு தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே" என வழங்குந்
தனிப்பாடலினால்அறியப்படும். இவர் காலத்து அரசர்கள் இவரிடத்தில் மிகவும்
அன்புவைத்திருந்ததனால், இவர் இங்ஙனஞ்செய்ய இடங்கொடுத்து வந்தார்கள்.

     இவருடைய காலம் - பாயிரத்தில் "நான்காஞ்சங்கமென முச்சங்கத்
தண்டமிழ்நூல் கலங்காமல் தலைகண்டானே" என்று இவர் காலத்திலிருந்த
வரபதியாட்கொண்டானென்னும் அரசனைக் கூறியிருத்தலாலும், அவ்வரசனை
இரட்டையர்களும் பாடியிருத்தலாலும், அவ்விரட்டையராற் பாடப்பட்ட
இராசநாராயணசம்புவராயனென்பான் கி. பி. 1331 - 1383 - வரை
ஆட்சிபுரிந்தவனென்று சாசன வாராய்ச்சியாளர் கூறுவதாலும் இவர் காலம்
கடைச்சங்கத்தார் காலத்துக்குப்பின் பதினான்காம் நூற்றாண்டின் இடைப்பகுதி
யாகுமென்றும், அருணகிரியார்காலமும் இதுவே யென்றும் கூறுவர்.

     இவ்வில்லிபுத்தூரார் சிவத்துவேஷம் பாராட்டுகிற வீர வைஷ்ணவ ரல்லர்.
அது- முதலில் விநாயகஸ்தோத்திரஞ் செய்திருத்தலாலும், அருச்சுனன்
தீர்த்தயாத்திரைச்சருக்கத்திலும் அருச்சுனன் தவநிலைச்சருக்கத்திலும்
பதின்மூன்றாம்போர்ச்சருக்கத்திலும் சைவசம்பிராதாயத்துக்கு வழுவுறாதபடி
சிவபிரானைச்சிறப்பித்தும் இதரதேவர்களைத் தாழ்த்தியுங் கூறியதனாலும் நன்கு
புலனாகின்றது. அன்றியும், வியாசர் புராணங்களில் ஒவ்வொரு தேவரை
ஒவ்வோரிடத்திற் சந்தர்ப்பத்துக்கேற்பச் சிறப்பித்துக் கூறியிருத்தல் போலவே,
இவரும்தமது நூலில் சூரியன் அக்கினியமன் முதலிய மற்றைத்தேவர்களையும்
சமயம்வந்தவிடத்துப் பக்ஷ