பக்கம் எண் :

200பாரதம்வீட்டும பருவம்

ரிறைஞ்சப்பற்பல் தேவருமாகி" என்றவிடத்துக் கூறப்பட்டது. ஈராறுநாமம்-
கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதநன், திரிவிக்ரமன்,
வாமநன், ஸ்ரீதரன், இருடீகேசன், பதுமநாபன், தாமோதரன் என்பவை. இந்தத்
துவாதசநாமங்களை முறையேசொல்லி உடம்பில் பன்னிரண்டிடத்தில் முறையே
திருமணிட்டுக்கொள்ளுதல், ஸ்ரீவைஷ்ணவ சம்பிராயதம்: அது- துவாத
சோர்த்துவபுண்ட்ர மெனப்படும். காணும் - தேற்றமுமாம். திரு வாய்மொழியில்
"அயர்வறு மமரர்க ளதிபதி யவனவன்" என்றவிடத்து, 'அமரர்கள்' என்றதுபோல,
இங்கே
‘இமையோர்'என்றது - முத்தியுலகத்தில் நிரதிசய ஆநந்தமனுபவிக்கும்
நித்திய சூரிகளைக் குறிக்கும். தன்னை நெற்றியிலே தரித்த பிராணிகளனைத்தையும்
இறுதியிற் கருமமொழித்து மீளுதலில்லாத முத்தியைப் பெறுவிப்பது
திருமண்காப்பென்னும் ஊர்த்துவபுண்ட்ரக்குறி யென்கிற மகிமையை "என்றும்
நான்முகன் முதல்யாரும் யாவையும், நின்ற பேரிருளினை நீக்கி நீணெறிச், சென்று
மீளாக்குறி சேரச் சேர்த்திடு, தன் திரு நாமத்தைத் தானுஞ் சாத்தியே" எனக் கம்பர்
கூறுவர். சுமடீர் - சுமடர் என்பதன் ஈற்றயல் திரிந்த விளி.

     இதுமுதற் பதின்மூன்று கவிகள் - பெரும்பாலும் ஒன்று மூன்று
ஐந்தாஞ்சீர்கள் மாங்காய்ச்சீர்களும், இரண்டு நான்கு ஆறாஞ்சீர்கள்
தேமாச்சீர்களும் ஏழாவது புளிமாச்சீரு மாகிய எழுசீராசிரியவிருத்தங்கள்.                                  (284)

2.- இதுமுதல் ஏழுகவிகளில், எட்டாம்போர்நாளிரவில் துரியோதனன்
படைவீட்டில் நடந்ததொருசெய்தியைத்தெரிவிக்கிறார்.

முன்போருடைந்துதனதில்லடைந்தமுடிமன்னன்முன்னையிரவிற்
றன்போலுமாமனவனோடுகேடுதருதம்பியோடுகருதிப்
பின்போதில்வண்மையொழிவானையோடியழையென்றுபேசவவனும்
மின்போலிறந்தவிளையோர்கள்பாடுவி்னவாவிருந்தபொழுதே.

இதுமுதல் ஐந்துகவிகள் - ஒருதொடர்.

     (இ-ள்.) முன் - முன்னே [எட்டாம்போர்நாள் மாலைபொழுதில்], போர்
உடைந்து-யுத்தத்தில் (வீமன்முன்) தோற்று, (பின்பு). தனது இல் அடைந்த - தன்
படைவீட்டை யடைந்த, முடி மன்னன் - கிரீடாதிபதியான துரியோதனராசன்,
முன்னை இரவில் - முன்னிராத்திரியிலே, தன் போலும்  மாமனவனோடும்-
(தீக்குணம் தீத்தொழில்களில்) தன்னையொத்த மாமனாகிய சகுனியோடும், கேடு தரு
தம்பியோடு-(தமக்கும் பிறர்க்கும்) தீங்கை விளைக்கிற தம்பியான துச்சாதனனோடும்,
கருதி-ஆலோசித்து, பின் போதில் வண்மை ஒழிவானை ஓடி அழை என்று பேச-
(முன்பகற்பொழுது முழுவதும் தானஞ்செய்து) பின்பகற்பொழுதில்
தானமொழிபவனான கர்ணனை விரைந்துசென்று அழைத்துவா என்று
(துச்சாதனனை நோக்கிச்) சொல்ல, அவன்உம் - (அவ்வாறு துச்சாதனனால்
அழைத்துக் கொண்டுவரப்பட்ட) கர்ணனும், மின் போல் இறந்த இளையோர்கள்
பாடு வினவா இருந்த பொழுது - மின்னல்போல (நிலையில்லாமல்) இறந்துபோன
தம்பி