பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்205

மண்ணுங்குலுங்கவரையுங்குலுங்கவெழுதூளிமாதிரமுமால்
விண்ணும்புதைக்கவடலாகவத்தின்மிசைசென்றுபுக்குவிரகால்.

     (இ-ள்.) கண்உம் துயின்று-கண்மூடியுறங்கி, (இராத்திரி கழிந்தபின்), துயில்உம்
உணர்ந்து - தூக்கமும் விழித்து, சிறு காலை உள்ள கடன்உம்-உதயகாலத்திற்
செய்யவேண்டிய (சந்தியா வந்தனம் முதலிய) கடமைகளையும், எண்ணும் கருத்தின்
வழிஏ - நினைத்தற்குக் கருவியான மனத்தின் வழியாக [மனவமைதியோடு], இயற்றி
- செய்துமுடிந்து,-(பின்பு), இகல் மன்னர் சூழ வர-வலிமையையுடைய அரசர்கள்
(தன்னைச்) சுற்றிலும் வரவும், (அந்தப் பாரத்தினால்), மண்உம் குலுங்க
(அசலையாகிய) பூமியும் நடுங்கவும், வரைஉம் குலுங்க-(அசலமாகிய) மலைகளும்
சலிக்கவும், எழு தூளி மாதிரம்உம் மால் விண்உம் புதைக்க - மேற்கிளம்பின
புழுதிதிக்குக்களையும் பெரியஆகாயத்தையும் மூடவும், அடல் ஆக வத்தின்மிசை-
கொடிய போர்க்களத்திலே, சென்று புக்கு-போய்ச் சேர்ந்து, விரகால் - தந்திரமாக,-
(எ-று.)-"மானவுரவோன்-அணிசெய்து" என மேற்கவியோடு தொடரும்.    (292)

10.நாகங்குறித்தகொடிமன்னர்மன்னைநடுவேநிறுத்தியடைவே
பாகங்கடோறுமொருகோடிமன்னர்பகதத்தனோடுநிறுவிப்
பூகம்பமாகவினமோடலம்புசனுமுன்புபோகவொருபேர்
யூகஞ்சருப்பதோபத்ரமாகவணிசெய்துமானவுரவோன்.

     (இ-ள்.) நாகம் - பாம்பின்வடிவத்தை, குறித்த-எழுதிய, கொடி -
துவசத்தையுடைய, மன்னர் மன்னை - ராஜராஜனான துரியோதனனை, நடுஏ
நிறுத்தி - சோம  மத்தியிலே நிற்கச்செய்து, அடைவுஏ - முறையே, பாகங்கள்
தோறும்- எல்லாப்பக்கங்களிலும், ஒரு கோடி மன்னர் - ஒருகோடி அரசர்களை,
பகதத்தனோடு- பகதத்தனுடனே, நிறுவி - நிற்கச்செய்து, பூகம்பம் ஆக-
(அதிபாரத்தால்) பூமியில் நடுக்கமுண்டாம்படி, இனமோடு-(தன்) கூட்டமாகிய பல
அரக்கர்களோடு, அலம்புசன்உம்-அலம்புசனென்னும் இராக்கதனும், முன்பு போக -
(சேனையின்) முன்னே செல்லும்படி, சருப்பதோபத்ரம் ஒரு பேர் யூகம் ஆக -
ஸர்வதோபத்ரமென்னும் ஒரு பெரிய படைவகுப்பாக, அணி செய்து -
(சேனைகளை) அணி வகுத்து, மானம் உரவோன்-பெருமையையும்
வலிமையையுமுடைய வீடுமன்,-(எ-று.)-"அமர்க்கண் நின்றான்" என அடுத்த
கவியோடு தொடரும்.

     சருப்பதோபத்ரம் - வடசொல்திரிபு; அதாவது - நாற்புறத்திலும் எங்கு நின்று
பார்த்தாலும் ஒரேவிதமாகக் காட்சிதோன்றும்படி சேனையை வகுத்தவியூகம்; இது-
சித்திரகவிகளில் ஒன்றாகவும் வழங்கும். ஒன்பதாநாட்போரின் தொடக்கத்தில் சில
உத்பாதங்கள் உண்டானதாக முதனூலிற் கூறியுள்ளது; அதை இப்பாட்டில்,
'பூகம்பமாக' என்றதனால் குறிப்பித்தார் போலும்.                   (293)