11.- மூன்றுகவிகள்-யுதிட்டிரன்பக்கத்தார் போர்க்களங்குறுகி அணிவகுத்துநின்றமை கூறும். நின்றானமர்க்கணவரங்குநிற்கவிவரிங்குநென்னனிருதன் கொன்றானெனத்தன்மதலைக்கொரெண்மரெழுவோரைநீடுகொலைசெய் தொன்றாகமன்னர்பலராவிகொண்டவுரவோனுமும்பர்பகைபோய் வென்றானுமற்றையிளையோருமொன்றின்விரகற்றகோவுமுதலோர். |
(இ-ள்.) அமர்க்கண் நின்றான் - போர்க்களத்தில் நின்றிட்டான்; அவர் அங்குநிற்க - அந்தத்துரியோதனன் பக்கத்தவர்கள் அவ்வாறுநிற்க,-இங்கு - இப்பக்கத்தில்,கென்னல்-நேற்று, நிருதன்-(அலம்புசனென்னும்) இராக்கதன், கொன்றான் என-(இராவானைக்) கொன்றிட்டா னென்று, தன் மதலைக்கு - தனது (தம்பியின்)மகனான இராவானுக்காக (இரங்கி), (அதற்குஈடாக), ஒர் எண்மர் எழுவோரை (துரியோதனன் தம்பிமார்களுள்) ஒருஎட்டுப்பேரையும் (மற்றும்) ஏழுபேரையும், நீடுகொலை செய்து-பெருங்கொலைசெய்து [ஒருங்கே அழித்து], ஒன்று ஆக -(அவர்களோடு) ஒருசேர, மன்னர் பலர் ஆவி கொண்ட-(மற்றும்) பலஅரசர்களதுஉயிரைக் கவர்ந்த, உரவோன்உம்-வலிமையையுடைய வீமனும், உம்பர் பகை -தேவர்களுக்குப் பகைவரான நிவாதகவசகாலகேயர்களை, போய் வென்றான்உம் -சென்று சயித்த அருச்சுனனும், மற்றை இளையோர்உம் - மற்றைத்தம்பியரான நகுலசகதேவரும், ஒன்றின் விரகு அற்ற - ஒருவகையிலும் வஞ்சனையில்லாத, கோஉம் -தலைவனான தருமனும், முதலோர் - முதலியவர்களாகிய. இவர் -இந்தப்பக்கத்தார்,- (எ - று.) -"களத்தினிடைவந்து" என வருங் கவியோடுதொடரும். ஒன்றின்விரகற்ற - மனம் மொழி மெய் என்னுந்திரிகரணங்களின் சிந்தை சொல் செயல் என்னும் மூவகைத்தொழிலிலும் வஞ்சனையில்லாத. (294) 12. | மற்றுள்ளமன்னர்புடைபோதமுன்னர்மழைமேனிமாயன்வரவே உற்றுள்ளவீரரொடுசேனைநாதனணிநிற்கவொண்கொயுளைமா முற்றுள்ளவெங்குமெழுபூழிதுள்ளளமுரசங்கடுள்ளமிகவுஞ் செற்றுள்ளமேவுகனறுள்ளவந்துசெருவெங்களத்தினிடையே. |
(இ-ள்.) மற்று உள்ள மன்னர் - மற்றுமுள்ள அரசர்கள் பலர், புடை போத -பக்கங்களில் வரவும், மழை மேனி மாயன்-நீல மேகம் போலுந் திருமேனியையுடைய கண்ணன், முன்னர்வர - முன்னேசெல்லவும், உற்றுள்ள வீரரொடு - கூடப்பொருந்தியுள்ள வீரர்களுடனே, சேனை நாதன் - (தன்) சேனைத்தலைவனான திட்டத்துய்மன், அணி நிற்க - படை வகுப்பின் முன்னே நிற்கவும், ஒள்கொய் உளை மா - பிரகாசமான கத்திரிக்கப்பட்ட பிடரிமயிரையுடைய குதிரைகள், முன் துள்ள-முன்னேகுதித்துச் செல்லவும், எழு பூழி - மேலேழுகிற புழுதி, எங்கும் துள்ள - எல்லாவிடத்தும் பரவவும், முரசங்கள்-யுத்தபேரிகைகள், மிகஉம் துள்ள-மிகுதியாக ஒலிக்கவும், செற்று உள்ளம் மேவு கனல்-கோபித்து மனத் |