பக்கம் எண் :

208பாரதம்வீட்டும பருவம்

வேறு.

14.-வீமனுடன்பொர அலம்புசன் வருதல்.

இந்திரனு மேனையிமை யோர்களு நடுங்க
வந்தரமு மெண்டிசையு நின்றதிர வதிரா
வெந்திறல லங்கல்புனை வீமனுடன் மலைவான்
வந்தனன லம்புசன் லம்புனைபு யத்தான்.

     (இ-ள்.) வலம் புனை புயத்தான்-பலத்தைக்கொண்ட
தோள்களையுடையவனாகிய, அலம்புசன்-அலம்புசனென்னும் அரக்கன்,-
இந்திரன்உம் ஏனை இமையோர்கள்உம் நடுங்க - தேவேந்திரனும்
மற்றைத்தேவர்களும், நடுக்கமடையவும், அந்தரம்உம் எண் திசை உம் நின்று
அதிர-மேலுலகமும் எட்டுத்திக்குக்களும்மிக அதிர்ச்சி பெறவும், அதிரா-
கர்ச்சனைசெய்துகொண்டு, வெம் திறல் அலங்கல் புனை வீமனுடன் மலைவான்-
கொடியபோருக்கு (அடையாளமாகத் தும்பைப்பூ) மாலை சூடிய வீமனுடனே
போர்செய்வதற்கு, வந்தனன்-,(எ - று.)-வலம் - வடசொல் திரிபு.

     இதுமுதல் பதினைந்து கவிகள்-கீழ் முதற்போர்ச்சருக்கத்தின் ஐம்பதாங்கவி
போன்ற கலிவிருத்தங்கள்.                                  (297)

15.-அலம்புசன்வருவதுகண்டு வீமன் தேரினின்று இறங்கி
அவ்வரக்கனெதிரே யோடுதல்.

செருவில்வெருவாநிருதசேகரன்வயப்போர்
மருவுசுடர்வாளினுடன்வந்தநிலைகாணா
விரவிவருதேரனையதேரின்மிசையிழியா
வுருமுருமெனாவிரைவினோடியெதிர்வந்தான்.

     (இ-ள்.) செருவில் வெருவா - போரில் அஞ்சாத, நிருதசேகரன் -
அரக்கர்களுக்குமுடியணிபோலச்சிறந்தவனான அலம்புசன், வய போர் மருவு-
வலியபோரைச்செய்தற்குப்பெருந்திய, சுடர் வாளினுடன் - ஒளியையுடைய
வாளாயுதத்துடனே,வந்த- (தன்னையெதிர்த்து) வந்த, நிலை-நிலைமையை, காணா-
பார்த்து,-(வீமன்)இரவி வரு தேர் அனைய தேரின் மிசை இழியா-சூரியன் வருகிற
தேரையொத்த(தன்) தேரின் மேல் நின்றுஇறங்கி, உரும் உரும் எனா-(காண்பவர்)
இடி இடிஎன்றுசொல்லும்படி, விரைவின் எதிர் ஓடிவந்தான் - வேகமா
(அவ்வரக்கனது)எதிரில்ஓடிவந்தான்;(எ-று.)-அடுக்கு-அச்சம்பற்றியது -
இரவிவருதேர்தடைப்படாதுவிரைந்துசெல்லுதற்கு உவமை.            (298)

16.-வீமன் அலம்புசனுடைய ஒருதோளைத் துணித்தல்

யாளியொரிரண்டிகல்புரிந்ததெனவிகலா
மீளிமையினாலும்வலியாலும்விறன்மிக்கோன்
வாளின்மிசைவாளதனைவைத்தடலரக்கன்
றோளிலொருதோணிலனுறும்படிதுணித்தான்.