பக்கம் எண் :

214பாரதம்வீட்டும பருவம்

சொற்பகலிலானிளவலசென்றனர்துதித்தார்
அற்பகலிலாவுலகில்வாழமரரெல்லாம்.

     (இ-ள்.) (அப்பொழுது), அல்  பகல் இலா உலகில் வாழ் அமரர் எல்லாம் -
(இவ்வுலகிற்போல) இராத்திரியும் பகலுமில்லாத சுவர்க்கலோகத்தில் வாழ்கிற
தேவர்கள் யாவரும், 'முன் பகலில்-முந்தினநாளிலே, மைந்தனை - அருச்சுனன்
மகனான இராவானை, முருக்கிய-கொன்ற, அரக்கன்-அலம்புசன், பின்பகலில்-
அடுத்தநாளிலே, வீழ-இறந்துவிழும்படி, சொல் பகல் இலான் இளவல்-(சொன்ன)
சொல் மாறுதலில்லாத தருமனுக்குத் தம்பியான் வீமன், வடிவேல் கொடு பிளந்தான்
- கூர்மையான வேலாயுதத்தால் (அவனைப்) பிளந்திட்டான்,' என்றனர் - என்று
சொல்லி, துதித்தார்-(வைரந்தீர்த்த வீமனது திறமையைக்) கொண்டாடினார்கள்;(எ-று.)

     சூரியனது உதய  அஸ்தமனங்களாலாகிய பகல் இரவு என்னும்
காலவேறுபாடுகள் அச்சூரியமண்டலத்துக்கு மிகமேலுள்ள தேவலோகத்தில்
இல்லையாதலால், 'அற்பகலிலா வுலகு' எனப்பட்டது. மூன்றாமடியில், பகல்-பகுதல்:
தொழிற்பெயர்: பகு - பகுதி, அல் - விகுதி. முற்பகல், பிற்பகல் என்பன-இங்கே,
ஒருபகலின் முன்பின்பகுதியை உணர்த்துவன அல்ல: "முற்பகல் செய்தான் பிற்பகல்
தன்கேடு, பிறன்கேடு தன்கேடு பிற்பகற்கண்டுவிடும்" என்ற திருக்குறள் இங்குக்
காணத்தக்கது                                                   (310).

                28.-அருச்சுனன்பாற் பல மன்னர் மடிதல்.

காசியர்கள் சேதியர்கண் மாளவர்க லிங்கர்
பூசலிடை யேழுபதி னாயிரவர் பொங்கிக்
கேசவ னடாவுகிளர் தேர்கெழு சுவேத
வாசியுடை யான்விசயன் வாளியின்ம டிந்தார்.

     (இ-ள்.) காசியர்கள் - காசிநகரத்தாரும், சேதியர்கள்- சேதிநாட்டாரும்,
மாளவர் - மாளவதேசத்தவரும், கலிங்கர்-கலிங்க நாட்டவரும் ஆகிய, ஏழு
பதினாயிரவர் - ஏழு பதினாயிரம்பேர், பூசலிடை - போரிலே, பொங்கி -
உக்கிரமாகஇருந்து (கடும்போர்செய்து),-கேசவன் நடாவு-கண்ணன் செலுத்துகிற,
கிளர்தேர்-விளங்குகிற தேரில், கெழு-பொருந்திய, சுவேதவாசி உடையான்-
வெள்ளைக்குதிரைகளையுடையவனாகிய, விசயன் - அருச்சுனனது. வாளியின் -
அம்புகளால், மடிந்தார் - இறந்தார்கள்: (எ-று.)

     நான்குவெள்ளைக்குதிரைகள் பூட்டியதொரு சிறந்ததேர், அக்கினிதேவனால்
அருச்சுனனுக்குக் காண்டவதகனகாலத்தில் அளிக்கப்பட்டது:
இவ்வெள்ளைப்பரிகளை யுடைமையால், 'சுவேத வாகநன்' என்று அருச்சுனனுக்கு
ஒருபெயர். ஸ்வேதவாஜு - வட மொழித்தொடர். கெழு-சாரியையுமாம்.  (311)