பக்கம் எண் :

ஒன்பதாம் போர்ச்சருக்கம்221

காய் பிளப்பதுபோலத் துண்டுபடும்படி, சிவேதன் உடல் கொண்டு உயிர்
செகுத்தான்-சுவேதனது உடம்பை (இலக்காக)க் கொண்டு அவனுயிரை ஒழித்தான்;
(இன்றைக்கு), கனகம முடிதலத்தில் சிந்த-பொற்கிரீடமணிந்த தலை
தரையிலேசிதறிவிழும்படி, சதானிகனை-, சரத்தால் அழித்தான்-அம்பினாற்
கொன்றான்;(ஆதலால்), வலத்தில் திகிரிதனை உருட்டும்-வலிமையால்
ஆஜ்ஞாசக்கரத்தைச்செலுத்துகிற, மான் தேர் மச்சத்து அவனிபர்தம்-குதிரைகள்
பூண்ட தேரையுடைய மத்ஸ்யதேசத்து அரசர்களது,குலத்துக்கு-,இவன்ஏ கூற்று-
இவ்வீடுமனே  யமனாவன்,' என்றார்-என்று  சொன்னார்கள்; (எ-று.)

     வீராடனதுமைந்தனையும் அவன்தம்பியான சதாநீகனையும் வீடுமனொருவனே
கொன்றிட்டதுபற்றி, இங்ஙன்கூறினார். திகிரி-தேர்ச்சக்கரமுமாம். பி-ம்:
சிதைத்தான்.                                                 (322)

40.-இருதிறத்துச் சேனாபதியரும் தம்மவரோடு பாசறைபுகுதல். 

சேந்தநெடுங்கண்முரிபுருவத்திட்டத்துய்மன்சேனையொடுஞ்
சார்ந்தநிருபரைவரொடுந்தானுந்தன்பாசறையடைந்தான்
பாந்தளுயர்த்ததுவசனுடன்பைம்பொற்கவரிமதிக்கவிகை
வேந்தருடனும்போய்ப்புகுந்தான்றன்பாசறையில்வீடுமனும்.

     (இ-ள்.) சேந்த-(கோபத்தாற்) சிவந்த, நெடு கண்-நீண்ட கண்களையும்,
முரி-(கோபத்தால்) நெறித்த, புருவம்-புருவங்களையுமுடைய, திட்டத்துய்மன்-,
சேனையொடுஉம்-(பாண்டவ)சைனியத்துடனும், சார்ந்த நிருபர் ஐவரொடுஉம்-
(தலைவராகப்) பொருந்திய பாண்டவராசர் ஐந்துபேரொடும், தானும்-, தன்
பாசறைஅடைந்தான்-தனதுபடைவீட்டைச் சேர்ந்தான்; வீடுமனும்-, பாந்தள் உயர்த்த
துவசனுடன் - பாம்பை உயரத்தில் எழுதிய கொடியையுடைய துரியோதனனோடும்,
பை பொன் கவரி - பசும் பொன்னாலாகிய காம்பையுடைய சாமரங்களையும், மதி
கவிகை - பூர்ணசந்திரன் போன்ற வெண்கொற்றக்குடையையு முடைய,
வேந்தருடன்உம் - அரசர்களுடனுன்,தன் பாசறையில் போய் புகுந்தான்-தனது
படைவீட்டிற் போய்ச்சேர்ந்தான்; (எ-று.)

     சேந்த - சிவந்த: மரூஉ; பொன் - பொற்காம்புக்குக் கருவியாகுபெயர்.
'பைம்பொற்கவரி மதிக்கவிகை' என்பதை, மத்திம தீபமாகப் பாந்தளுயர்த்த
துவசனுக்குங் கூட்டுக.                                          (323)

41.-மறுநாள் சூரியோதயவருணனை. 

சென்ற பரிதி யாயிரம்பொற் சிகரப் பொருப்புக் கப்புறத்து
நின்ற விருளை யிப்புறத்து நீங்கா வண்ணங் குடியேற்றி
ஒன்ற வுலக முற்றதுயி லுணர்த்து வான்போ லுதயமெனுங்
குன்ற மிசைநின் றனைவரையுங் கரத்தா லெழுப்பக்
                              குணக்கெழுந்தான்.

     (இ-ள்.) சென்ற பரிதி - (முந்தினநாள் மாலைப்பொழுதில்) அஸ்தமித்த
சூரியன், ஆயிரம் பொன் சிகரம் பொருப்புக்கு அ புறத்து நின்ற இருளை -
பொன்மயமான ஆயிரங்கொடுமுடிகளை