யுடைய மேருகிரிக்கு வடபுறத்தில் நின்ற இருட்டை, இ புறத்து நீங்கா வண்ணம் குடி ஏற்றி - (அவ்விரவில்) இத்தென்புறத்தில் நீங்காதபடி தங்கச்செய்து, (அவ்விரவு கழிந்த பின்பு), உலகம் ஒன்ற உற்ற துயில் உணர்த்துவான் போல்-உலகத்து உயிர்களெல்லாம் ஒருசேர அடைந்த தூக்கத்தை (ஒழித்து) விழிக்கச் செய்பவன் போல, உதயம் எனும் குன்றம்மிசை நின்று அனைவரைஉம் கரத்தால் எழுப்ப- உதயகிரியென்கிற மலையின்மேல் (தான்) நின்றுகொண்டு எல்லோரையும் (தன்) கைகளால் [கிரணங்களால்] எழுப்பும்படி, குணக்கு எழுந்தான் - கீழ்திசையில் தோன்றினான் [உதித்தான்]; (எ-று.) பூமிமத்தியிலுள்ள மகாமேருகிரிக்கு இப்புறத்தில் இருட்பொழுதாம் பொழுது, அப்புறத்தில் பகற்பொழுதாதலை இருளைக்குடியேற்றியதாகவும், உதயகாலத்திற் சூரியகிரணம் உலகத்தில் விளங்க எல்லாப்பிராணிகளும் துயிலொழிந்து எழுதலைச் சூரியன் தன்கைகளால் உலகத்து உயிர்களைத் தொட்டுத் துயிலெழுப்புவதாகவும் வருணித்தார். இத்தற்குறிப்பேற்றணிக்கு, கரம் என்ற சொல்லின் சிலேடை அங்கமாக நின்றது. (324) ஒன்பதாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. _____ பத்தாம்போர்ச்சருக்கம். 1.-கடவுள்வாழ்த்து. வலியி லன்று தந்தை செற்ற மைந்த னுக்கு வந்தபேர் நலிவெ லாம கற்று நாம நாலி ரண்டெ ழுத்துடன் பொலியு நாம மறைகள் சொன்ன பொருள்வி ளக்கு நாமமுன் கலிய னெங்கண் மங்கை யாதி கண்டு கொண்ட நாமமே. |
(இ - ள்.) அன்று - முன்னொருகாலத்தில், வலியில் - கடுமையாக, தந்தைசெற்ற - பிதாவான இரணியனாற் கோபித்துவருத்தப்பட்ட, மைந்தனுக்கு - இளம்பிள்ளையான பிரகலாதனுக்கு, வந்த பேர் நலிவு எலாம் - நேர்ந்த பெருந்துன்பங்களையெல்லாம், அகற்றும் - நீக்கியருளின, நாமம் - திருநாமமும்,- நால் இரண்டு எழுத்துடன்-எட்டு எழுத்துக்களோடு, பொலியும் - விளங்குகிற, நாமம் - திருநாமமும்,- மறைகள் சொன்ன பொருள் - வேதங்கள் சொல்லிய அருத்தங்களையெல்லாம், விளக்கும் - விளங்கத்தெரிவிக்கிற, நாமம் - திருநாமமும்,-முன் - முன்பு, கலியன் - கலியனென்னும் பெயருடையவரும், எங்கள் மங்கை ஆதி-திருமங்கை யென்னும் ஊருக்குத் தலைவருமாகிய எங்கள் திருமங்கையாழ்வார், கண்டுகொண்ட - அறிந்து கொண்ட, நாமம்ஏ - திருநாமமேயாம்; தன்மகனான பிரகலாதன் தன்கட்டளைப்படி தன்பெயரைச் சொல்லிக் கல்விகற்காமல் நாராயணநாமம் சொல்லிவரவே, தந்தையான இரணியன் மிகக்கோபங்கொண்டு பாம்புகளையும் யானைகளையும் நெருப்பையும் விஷத்தையும் காற்றையும் மற்றும்பலவுபாயங்களை |