யும் கொண்டு அம்மகனை மிகவும்வருத்த, அவன் நாராயணநாமோச்சாரணபலத்தால் சிறிதும் துன்பமுறாமல் அந்த அபாயங்களெல்லாவற்றினின்றும் நீங்கினான் என்பது-பிரசித்தம். நம்பெருமாளெட்டெழுத்தின் பெருமை நவிலுமதோ சம்பரன் மாயப்புரோகிதர் சூழ்வினை தாரணிவாள், வெம்படை மாசுணம் மாமத வேழம்விடம் தழல் கால், அம்பரமேமுதலானவை பாலனுக்கு அஞ்சினவே'' என்றார் திருவரங்கத்துமாலையிலும். "ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த்தம்'' என்றும், "ஸர்வவேதாந்தஸாரார்த்த:"என்றும்நூல்களிற் கூறப்படுதல்பற்றி, 'மறைகள் சொன்ன பொருள் விளக்கு நாமம்" என்றார். கலியன்-மிடுக்குடையவன்; கலி-வலிமை. இவர் பெருமாளைக் கொள்ளையிடும்பொழுது, சகலவஸ்திராபரணங்களையுங் கவர்ந்த பின் திருவடிவிரலிலுள்ள திருவாழியைப் பல்லாற் கடித்துவாங்கின மிடுக்கால், இவரைத் திருமால் கலியனென்று பேரிட்டு அழைத்தனர். எங்கள் என்றபன்மை - தன்னைச்சேர்ந்தவர்களையுங் கூட்டியது. 'எங்கள்மங்கையாதி' என்றதனால், வில்லிபுத்தூராரது ஸ்ரீவைஷ்ணவஅபிமானமும் திருமங்கைமன்னன்பாசுரத்தில் இவர்க்குள்ள ஈடுபாடும் விளங்கும். திருமங்கையாழ்வார் - ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தில் சிறந்த பக்தர்களாக வழங்கப்படுகிற ஆழ்வார்கள் பதின்மருள் ஒருவர்; சோழநாட்டில் திருமங்கையென்ற தலத்தில் பிறந்தவர்; இவர் ஒரு சோழராசனிடத்தில் மந்திரியாயிருந்து அவனது திறைப்பொருளையெல்லாம் பாகவதாராதநம்பண்ணிச் செலவுசெய்து மற்றும் அந்தக்கைங்கரியத்தை நடத்தும் பொருட்டு வழிபறித்துப் பொருள்தேடிவருகையில், திருமால் இவருக்குத் திருவருள்செய்யக்கருதித் தாம் பிராட்டியுடனே கலியாணக்கோலங்கொண்டு மிகுந்த ஆபரணங்களோடும் திரண்ட செல்வத்தோடும் அவ்வழியிலே செல்ல, இவர் கூட்டத்தோடு சென்று அவர்களை வளைத்துவழிபறித்துப் பொருள்களை யெல்லாங் கட்டிவைத்து எடுக்கத்தொடங்க, அது எடுக்க முடியாமையாலே, அவ்வெம்பெருமானைநோக்கி 'நீ என்ன மந்திரவாதம் பண்ணினாய்' என்றுசொல்லி வருத்திக்கேட்க, அப்பொழுது ஸ்ரீமந்நாராயணன் 'அந்தமந்திரத்தை உனக்குச்சொல்லுகிறேன் வா' என்று தனக்குரிய அஷ்டாக்ஷரமகாமந்திரத்தை இவருக்கு உபதேசித்தருளிக் காட்சிகொடுக்க, இவரும் பெருமாளைச் சேவித்து ஞானக்கண்பெற்று "வாடினேன்.........நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன் நாராயணா வென்னும் நாமம்" என்று தொடங்கிப் பெரியதிருமொழி முதலிய திவ்வியபிரபந்தங்களைப் பாடிப் பெருமையுற்றுப் பேறு பெற்றனரென்பது வரலாறு. இதுமுதல் பதினாறு கவிகள் - ஈற்றுச்சீரொன்று விளச்சீரும் மற்றவை மாச்சீர்களுமாகிய எழுசீராசிரியவிருத்தங்கள். (325) 2.-இரண்டுகவிகள் - தருமன்தன்சேனையோடு போர்க்களங்குறுக, முந்தியவியூகமாகவே சேனை அணிவகுப்படுதல். தருமராசன்மதலைபஞ்சசயனநின்றெழுந்தபின் கருமமானகாலையிற்கடன்கழித்துநேமியம் |
|