வீடுமன்னெனுந்தடக்கைவீரமன்னும்வெஞ்சுடர்க் காடுமன்னுபரிதியைக்கரங்குவித்திருந்தபின் தோடுமன்வலம்புரித்துலங்குதாமநிருபனும் நீடுமன்னர்பலரும்வாயிலிருபுறத்துநிற்கவே. |
(இ-ள்.) (அப்பொழுது), வீடுமன் எனும்-பீஷ்மன் என்கிற, தட கை வீரம்
மன்உம்-பெரியகைகளையுடைய வீரத்தன்மையுள்ள அரசனும், வெம்சுடர் காடு
மன்னு பரிதியை - உஷ்ணமான ஒளிகளின் தொகுதி பொருந்திய சூரியனை, கரம்
குவித்து இருந்தபின்-கைகூப்பித்தொழுது [சந்தியாவந்தனம் முதலியன முடித்து]
இருந்தபின்பு,-தோடு மன் - இதழ்கள் நிறைந்த, வலம்புரி-
நஞ்சாவட்டைமலர்களாகிய, துலங்கு - விளங்குகிற, தாமம்-மாலையையுடைய,
நிருபன்உம்-துரியோதனராசனும், நீடு மன்னர் பலர்உம்-பெரிய மற்றும்பல
அரசர்களும், வாயில் இரு புறத்துஉம் நிற்க,- (எ-று.)-“நீடுதேரிலேறினான்''
எனஅடுத்த கவியோடு முடியும்.
வீடுமன்னெனும், ன்-விரித்தல். பரிதியைக் கரங்குவித்திருத்தல்-
உபஸ்தாநமும்,ஸூர்யநமஸ்காரமுமாம். திரிபு என்னுஞ்சொல்லணி
காண்க. (328)
5. | பாடல் வனைந்திலங்குகழலுமுத்துவடமும்வாகுவலயமும் புனைந்தசெம்பொன்மவுலியோடுபொற்பின்மீதுபொற்பெழ முனைந்தடங்கவின்றுநாமுடித்தும்வெய்யபோரெனா நினைந்துதன்பனைப்பதாகைநீடுதேரிலேறினான். |
(இ-ள்.) வனைந்து இலங்கு - அணியப்பட்டு விளங்குகிற, கழல்உம் -
வீரக்கழலும், முத்துவடம்உம் - முத்தாரங்களும், வாகுவலயம்உம் -
தோள்வளைகளும், புனைந்த செம் பொன் மவுலியோடு - தரித்த
செம்பொன்னலாகிய கிரீடமும், பொற்பின்மீது பொற்பு எழ - (தனதுஉடம்பின்)
அழகின் மேல் அழகியதாய்ப்பொருந்த, ‘இன்று- இன்றைக்கு, நாம்-, அடங்க-
(பகை)ஒழியும்படி, முனைந்து - உக்கிரமாக முயன்று, வெய்ய போர் முடித்தும் -
கொடியபோரை முடித்துவிடுவோம்,' எனா நினைந்து-என்று எண்ணி, தன் -
தனது,பனை பதாகை நீடு தேரில் - பனைக்கொடியையுடைய உயர்ந்த
தேரின்மேல்,ஏறினான்-; (எ-று.)
"அழகின்மே லழகுபெற அணியனைத்து மணிந்தருளி'' என்றார்,
கலிங்கத்துப்பரணியிலும். பத்தாநாளில் தான் அழிவ