பக்கம் எண் :

226பாரதம்வீட்டும பருவம்

தாக முன்னே சொல்லியுள்ளானாதலால், இவ்வாறு நினைத்தான். முனைந்து -
பொருது எனினுமாம்.                                         (329)

6.-வீடுமன் போர்க்களஞ் சேர்தல்.

சுற்றறாதவில்லினன்றொடைமிடைந்ததூணியன்
கொற்றவாகைவாளினன்கூரவீரவேலினன்
மற்றுமாயுதங்களோடுமன்னரோடும்வார்முர
செற்றுமாரவத்தினோடுமடுகளத்தினெய்தினான்.

     (இ-ள்.) சுற்று அறாத - கட்டு நீங்காத, வில்லினன் - வில்லையுடையவனும்,
தொடை மிடைந்த - அம்புகள் நெருங்கிய, தூணியன் - புட்டிலை யுடையவனும்,
கொற்றம் வாகை வாளினன்- வெற்றிக்குஅடையாளமானவாகைப் பூமாலையைச்
சூடின வாளையுடையவனும், கூர வீரம் வேலினன் -கூர்மையையுடைய
வீரத்தன்மைக்குஉரிய வேலாயுதத்தை யுடையவனுமாய், மற்றும்ஆயுதங்களோடு
உம்- வேறு பல படைக்கலங்களுடனும், மன்னரோடுஉம்-எல்லாஅரசர்களோடும்,
வார் முரசு எற்றும் ஆரவத்தினோடுஉம்-தோற்கயிற்றாற்கட்டிய
பேரிகைகள் அடிக்கப்படும் முழக்கத்தோடும், அடு களத்தின் எய்தினான் -
போர்செய்தற்குரிய களத்தில் சேர்ந்தான் (வீடுமன்); (எ-று.)-தொடை -
தொடுக்கப்படுவது; அம்பு.                                     (330)

7.-முன்னைநாள்வியூகமே வீடுமனும் வகுத்துநிற்க,
ஸ்ரீக்ருஷ்ணன் அருச்சுனனிடம் இன்றுவீடுமனுக்குவிமானமளிப்பாயெனல்.

தானுமுன்னணிந்தவாறுதானையைநிறுத்தியச்
சேனைமன்னன்வந்துநின்றநிலைமைகண்டுசெங்கண்மால்
வானினின்றிழிந்தகங்கைமைந்தனுக்குவானுலாம்
யானமின்றளித்தியென்றுவிசயனோடிசைக்கவே.

இதுமுதல் ஆறுகவிகள் - குளகம்.

     (இ-ள்.) அ சேனை மன்னன் - அந்தச்சேனைத்தலைவனான வீடுமன்,-
தான்உம் - (பாண்டவர்கள்போலவே) தானும், முன் அணிந்த ஆறு-முந்தின நாளிற்
படைவகுத்தவிதமாகவே [சருவதோபத்திரவியூகமாக], தானையை நிறுத்தி - (தன்)
சேனையை (அணிவகுத்து) நிற்கச்செய்து, வந்து நின்ற - (எதிரில்) வந்து நின்ற,
நிலைமை-நிலைமையை, கண்டு-,-செம் கண் மால்-சிவந்த திருக்கண்களையுடைய
கண்ணபிரான், விசயனோடு - அருச்சுனனுடனே, 'வானினின்று இழிந்த கங்கை
மைந்தனுக்கு-ஆகாயத்தினின்று இறங்கிய கங்கையின் குமாரனான வீடுமனுக்கு,
வான் உலாம் யானம் - மேலுலகத்துக்குச் செல்லும் விமானத்தை, இன்று -
இன்றைத்தினத்தில், அளித்தி - கொடுப்பாய்,'  என்று இசைக்க - என்றுசொல்ல,-
(எ-று.)- "விசயன் (8) என்ற போது (11)'' என மேற்கவிகளோடு தொடரும்.

     வானுலாம் யான மளித்தல்-இறந்து தேவவிமானமேறிச்சுவர்க்கஞ் செல்லும்படி
செய்தல். 'வானினின்று இழிந்த' என்ற