தைக் கங்கைக்கு அடைமொழியாக்கினால், பகீரதன் கங்கை கொணர்ந்த சரித்திரத்தையும், மைந்தனுக்கு அடைமொழியாக்கினால் சாபத்தால பிரபாசவசு பீஷ்மனான வரலாற்றையும் குறிக்கும். யாநம் - வாகனம்; வடசொல். (331) 8.-அருச்சுனன்சிறப்பு. போரினண்டர்பகையைமுன்புபொருதுவென்றவின்மையான் மூரிவெங்கொடிக்குரங்குமுன்னடக்குமேன்மையான் வாரிதங்கொண்மேனியான்வனம்புகுந்துவருதலான் யாருமின்றிராமனென்னவிசையநின்றவிசயனே. |
(இ-ள்.) முன்பு - முன்னொருகாலத்தில், அண்டர் பகையை- தேவர்களுக்குப்பகைவர்களை, போரின் பொருது - யுத்தத்தில் தாக்கி, வென்ற - சயித்த,வின்மையான்-வில்லின் திறத்தாலும், முன் - (தனதுதேரின்) முன்னிடத்தில், மூரிவெம் கொடி-வலிமையுடைய பயங்கரமான துவசத்தில், குரங்கு நடக்கும் -அனுமான் பொருந்திய, மேன்மையான் - பெருமையாலும்,- வாரிதம் கொள் -மேகத்தையொத்த, மேனியான் - திருமேனியினாலும்,-வனம் புகுந்து வருதலான் -காட்டிற்சேர்ந்து (வசித்து) வந்ததனாலும், யார்உம் இன்று இராமன் என்ன -யாவரும் இக்காலத்தில் (இவன்) இராமபிரான் என்று சொல்லுதற்கு, இசைய நின்ற -ஏற்றபடி நின்ற, விசயன் - அருச்சுனன்,- (எ-று.)- "என்றபோது'' என மேற்பதினோராங்கவியோடு இயையும். விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீராமமூர்த்திக்கும் அருச்சுனனுக்கும் சில ஒற்றுமைநயங்காட்டி உவமைகூறினார். இராமனுக்கு, அண்டர்பகையை வெல்லுதல்- இராவணாதி இராக்கதரை அழித்தல்; அருச்சுனனுக்கு, அண்டர்பகையை வெல்லுதல் - நிவாதகவசகாலகேயர்களை வதைத்தல். அனுமக் கொடியும், நீலமேனியும்- இருவர்க்கும் உண்டு, இராமனுக்கு வனம்புகுதல்-பதினான்குவருஷமும், அருச்சுனனுக்கு வனம்புகுதல்-பன்னிரண்டு வருஷமுமாம்; இனி, இரண்டாமடிக்கு - இராமனுக்கு ஆகும்பொழுது, வலிய கொடிய நீண்ட குரங்கின்சேனை முன்னேசெல்லப்பெற்ற பெருமையால் என்று உரைப்பினும் அமையும்; கொடி - நீளம். வாரிதம் - வடசொல்; நீரைக் கொடுப்ப தென்று பொருள். (332) 9.-இரண்டுகவிகள்-வீரவாதமாக அருச்சுனன் கண்ணனோடு கூறுவன. சிலைபதாகையிவுளிதேர்செழுங்கனலளித்தன வலவன்யாரெனிற்குறிப்பொடென்னையாளவந்தநீ தலமகீபரல்லதேவர்தானவரெதிர்ப்பினுங் கொலைபடாமலேவர்போவர்குன்றெடுத்தகோவலா. |
(இ-ள்.) குன்று-கோவர்த்தனமலையை, எடுத்த-(குடையாக) எடுத்துப்பிடித்த, கோவலா-பசுக்களைக் காத்தலில் வல்லவனே! சிலை-(எனது) காண்டீவவில்லும், பதாகை-குரங்குக்கொடியும், இவுளி-(வெள்ளைக்) குதிரைகளும், தேர்-(சிறந்த) தேரும், செழு |