பக்கம் எண் :

230பாரதம்வீட்டும பருவம்

     (இ-ள்.) (அச்சமயத்தில்),  துன்னிமித்தம்உம் பல - அநேக துர்நிமித்தங்களும்,
தொடர்ந்து செய்ய- தொடர்ச்சியாக உண்டாக, (அதுகண்டு), மித்திரர்க்கு நாள்உம்
உதவி செய்யும்உறுதியோன் - சினேகிதர்களுக்கு எந்நாளிலும் உபகாரஞ்செய்யும்
உறுதிக்குணத்தையுடைய வீடுமன், வெய்ய ஆம் அ நிமித்தம் நல்நிமித்தம் ஆகும்
என்று உன்னி - கொடியனவாகிய அந்தத்தீ நிமித்தங்களை
நல்லநிமித்தங்களாகுமென்று கருதி, அகம் தெளிந்து-மனம்தெளிவடைந்து, வில்
நிமித்தம் வாளியால் - வில்லைக் கருவியாகவுடைய (தான்) எய்யும் அம்புகளால்,
அ வாளிகள் விலக்கினான் - (பகைவரது) அந்த அம்புகளை விலகச்செய்தான்;
(எ-று.)

     நிமித்தம் - பின்வரும்பயனை முன்னே தெரிவிக்குங் குறி: அது -
துர்நிமித்தமென்றும், சந்நிமித்த மென்றும் இருவகைப்படும். துர்நிமித்தம் -
தீநிமித்தம்;பின்வருந்தீமையைத் தெரிவிக்குங் குறி. சந்நிமித்தம்- நல்நிமித்தம்;
பின்வரும்நன்மையைத் தெரிவிக்குங் குறி. துர்நிமித்தம் - ஆடவர்க்கு இடக்கண்
இடத்தோள் இவை துடித்தல் முதலியன. தனக்கு விரைவில் நேரும் அபாயத்தை
முன்னர்த் தெரிவிக்கிற தீநிமித்தங்களைச் சுபநிமித்தங்களாக வீடுமன் கருதியது,
உலகவாழ்க்கையில் பற்றுஅற்றதனாலும், உயர்ந்த மறுமைக்கதியை அடையும்
உவப்பினாலும், நீதி நெறிதவறாத பாண்டவர்வெற்றிபெறுதல் நியாய மென்ற
கருத்தினாலு மென்க. அம்புதொடுத்தற்கு வில் கருவி யாதலால், 'வில் நிமித்தவாளி'
எனப்பட்டது. மித்ரன் என்னும் வடசொல்லுக்கு-அளவறிந்து காப்பவனென்று
காரணப்பொருள் உரைப்பர்.                                    (337)

14.-மாற்றரசர் வென்னிட வீடுமன் எய்தல். 

துருபதேயர்மகதநாடர்வெங்குலிங்கர்சோனகர்
கருநடேசர்சிங்களர்கடாரபூபர்கௌசலர்
தருமராசன்மதலைசேனைமுதுகிடச்சரங்கள்போய்
ஒருவர்போலவனைவர்மேலுமுருவவெய்துறுக்கினான்.

     (இ-ள்.) தருமராசன் மதலை சேனை - தருமபுத்திரனது சேனையிலே,
துருபதேயர் - துருபதநாட்டரசர்களும், மகதநாடர்-மகததேசத்தரசர்களும், வெம்
குலிங்கர் - கொடிய குலிங்கதேசத்தரசர்களும், சோனகர் - சோனகநாட்டரசர்களும்,
கருநட ஈசர் - கர்ணாடகதேசத்தரசர்களும், சிங்களர்-சிங்களதேசத்தரசர்களும்,
கடார பூபர் - கடாரதேசத்தரசர்களும்,  கௌசலர்-கோசலதேசத்தரசர்களும், முதுகு
இட - புறங்கொடுக்கும்படி, ஒருவர் போல அனைவர் மேல்உம் சரங்கள் போய்
உருவ-ஒருத்தர்மேற் போலவே எல்லார்மேலும் அம்புகள் சென்று ஊடுருவும்படி,
எய்து-உறுக்கினான் - தொடுத்துக் கோபித்தான், (வீடுமன்); (எ-று.)

     வெய்து உறுக்கினான் எனப் பிரித்து, கடுமையாகச் சினங்கொண்டான்
எனினுமாம். துருபதேயர், கௌசலர் - தத்திதாந்த நாமம். கருநடம், சிங்களம் -
கர்ணாடம், ஸிம்ஹளம் என்னும் வட