பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்235

உந்துரககேதனனுரைப்பமுகிலேழுமுடனூழியிறுதிப்பொழிவபோல்
வந்துவடிவாளிமழைசிந்தினர்பராக்கிரமவாசியிபமாவிரதரே.

     (இ-ள்.) முந்து படை வீரர்-(போருக்கு)முற்பட்டுவந்த சேனை வீரர்கள், கதை
வீமன் எதிர்-(சந்துருகாதிநியென்னுங்) கதாயுதத்தையுடைய வீமசேனனது எதிரிலே,
மிக நொந்து-மிகுதியாக வருந்தி, முதுகு இடுதல்-புறங்கொடுத்தலை, கண்டு -
பார்த்து, உந்து உரக கேதனன்-உயர்ந்தபாம்புக்கொடியையுடைய துரியோதனன்,
முனியா - கோபங்கொண்டு, உரைப்ப - (அவ்வீம அருச்சுனரை எதிர்க்கும்படி
கட்டளை) கூற,-ஐந்து உறழும் நூறு படி ஆயிரவர்-ஐந்தினாற்பெருக்கப்பட்ட
நூறென்னும் அளவையுடைய
ஆயிரமென்னுந்தொகையுடையவர்களும்
[ஐந்துலக்ஷம்பேரும்], வின்மையில் அருச்சுனனை ஒத்த அடலோர் - விற்போர்
வல்லமையில் அருச்சுனனைப்போன்ற
வலிமையையுடையவர்களுமாகிய,
பராக்கிரமம் வாசி இபம் மா இரதர்-பகைவெல்லும்ஆற்றலையுடையகுதிரை யானை
பெருந்தேர் என்பவற்றில் ஏறிய வீரர்கள்,-முகில் ஏழ்உம்-ஏழுமேகங்களும், உடன்-
ஒருசேர, ஊழி இறுதி-கால்பாந்தகாலத்தில் பொழிவ போல் - (வந்து) மழை
பொழிவனபோல, வந்து-(திரண்டு எதிர்த்து) வந்து, வடி வாளி மழை சிந்தினர் -
கூர்மையான அம்பின்மழையைப் பொழிந்தார்கள்; (எ-று.)

     பராக்கிரமம்-பர ஆக்கிரமம் எனப் பிரியும்; பரர்-பகைவர், (அவர்களை)
ஆக்கிரமித்தல்-வென்றுவசப்படுத்தல்; இது-வீரர்க்கு அடைமொழி. உறழ்தல்-
பெருக்கல். உந்துதல்-உயர்தல், ஏறுதல். ஊழி-பிரமனாயுள்; அல்லது, பிரமனது
தினம். பிரமனதுநாள் ஒவ்வொன்றன் பகலிறுதியிலும் பிராமனாயுளிறுதியிலும்,
ஏழுமேகங்களும் விரைந்து ஒருங்கு எழுந்து அளவிறந்த மழைபொழிந்து
உலகங்களை யழிக்கு மென்பது நூற்கொள்கை. பொழிவ=பொழிவது: விவகாரம்.
                                                         (345)

22.-அருச்சுனன் சென்று எதிரிகள் பொழியும் அம்புமழையை
விலக்குதல்.

வெவ்வனமெரிக்கடவுளுண்டிடவணக்குமொருவில்லியுமவ்வில்லொ
                                         டெதிர்போ
யவ்வவர்தொடுத்துவிடுமம்புகளெனைப்பலவுமவ்வகைதொடுத்து
                                           விலகிக்
கைவரிவிலற்றுநடுநாணினடுவற்றுவளர்கைத்தலமுமற்றுவிழவே
வைவரிவடிக்கணைகளேவினன்மணித்திகிரிவலவன்விடுதேரில்
                                         வருவோன்.

     (இ-ள்.) மணி - அழகிய, திகிரி - சக்கராயுதத்தையுடைய, வலவன்-பாகனாகிய
கண்ணபிரான், விடு - விசையாகச் செலுத்துகிற, தேரில்-இரதத்திலே, வருவோன் -
வருபவனும், வெம்வனம்-கொடியகாண்டவவனத்தை, எரி கடவுள் உண்டிட -
அக்கினிதேவன் புசிக்க, வணக்கும் - (தான்) வளைத்த, ஒரு வில்லிஉம்-
ஒப்பற்றவில்லையுடையவனுமான அருச்சுனனனும், அ வில்லொடு-
(காண்டீவமென்னும்) அந்த வில்லுடனே, எதிர்போய்-எதிரிற்சென்று, அ அவர்
தொடுத்து விடும் அம்புகள் எனை பலஉம்-அந்தந்தப் பகைவீரர்கள் (வில்லில்)
தொடுத்து விடுகிற அம்புகள் எல்லாவற்றையும், அ வகை தொடுத்து-அவர்கள்
தொடுக்கும்