பக்கம் எண் :

236பாரதம்வீட்டும பருவம்

வகையாகவே எதிரம்பு தொடுத்து, விலகி-விலக்கி, (அவர்கள்), கை வரி வில் நடு
அற்று - கையிற்பிடித்த கட்டமைந்த விற்கள் நடுவில் துணிபட்டு, நாணின் நடு
அற்று - வில்நாணியின் நடுவிடமும் துணிபட்டு, வளர் கை தலம்உம் அற்று -
வளர்ந்துள்ள கைகளினிடங்களும் துணிபட்டு, விழ - கீழ்விழும்படி, வை வரி வடி
கணைகள் - கூர்மையான நீண்ட வடிக்கப்படுதலையையுடைய அம்புகளை,
ஏவினன் - (அவர்கள்மேல்) செலுத்தினான்; (எ-று.)

     அருச்சுனன்  பகைவரெய்த அம்புமழையை விலக்கி மற்றும் பல
பாணங்களைச் செலுத்தி அவர்களது வில்லையும் வில்நாணியையும் கைகளையும்
அறுத்துத்தள்ளின னென்பதாம். மிகப் பசித்து அந்தணவடிவத்தோடுவந்த அக்கினி
பகவானுக்கு அருச்சுனன் காண்டவவனத்தை அதிலுள்ளசராசரங்களுடனே
விருந்தளித்தபொழுது, அந்த அக்கினியினிடத்தினின்று காண்டீவமென்னும்
வில்லைப் பெற்று, அதினின்று தொடுத்த அம்புகளால், அப்பூஞ்சோலையிலுள்ள
பிராணிகள் தப்பி வெளியிற்செல்லாதபடி அவற்றையெல்லாம் கொன்று தள்ளியும்,
அவ்வனத்துக்குஉரிய இந்திரனால் ஏவப்பட்டுவந்து ஏழுமேகங்களும் பொழிந்த
அடைமழையைச் சரக்கூடுகட்டித்தடுத்தும் பின்னும் தேவேந்திரன்
பெருங்கோபங்கொண்டு தேவர்களுடன்வந்து எதிர்க்க அவர்களை விற்போரில்
வென்றும் அருச்சுனன் திறங்காட்டின னென்பது, கீழ்க் காண்டவதகனச்சருக்கத்து
வரலாறாம். விலகி-விகாரம்.                                       (346)

23.-வீமார்ச்சுனர்பொர, யாவரும் பறந்துபோதல்.

தருமன்முதலைவரையும்வென்றிடுதுமென்றுதுச்சாதனனொடைவரிளையோர்
பொருமுனையின்வீடுமன்முனின்றவர்களல்லதுபுகன்றநரபாலரெவரும்
பருமமதமாபுரவிதேர்கொடுபறந்தனர்படாதவர்கெடாதகதையுஞ்
செருமுனைசராசனமுமுடையவிருவோருநனிசீறியமர்செய்தபொழுதே.

     (இ-ள்.) கெடாத - அழியாத, கதைஉம் - (சத்துருகாதினியென்னும்)
கதாயுதத்தையும், செரு முனை - போரை உக்கிரமாகச் செய்கின்ற, சராசனம் உம் -
காண்டீவவில்லையும், உடைய-,இருவோர்உம் - (வீம அருச்சுனர்) இரண்டுபேரும்,
நனி சீறி - மிகக்கோபித்து, அமர் செய்த பொழுது - போர் செய்த அச்சமயத்தில்,-
தருமன் முதல் ஐவரைஉம் வென்றிடுதும் என்று - தருமபுத்திரன் முதலிய
பஞ்சபாண்டவரையும் சயித்திடுவோமென்று (வீரவாதங்) கூறி, பொரு முனையின் -
போர்செய்யுமிடத்திலே, வீடுமன் முன் - பீஷ்மனுக்குமுன்னே, துச்சாதனனொடு
நின்றவர்கள் - துச்சாதனனுடன் வந்து நின்றவர்களாகிய, ஐவர் இளையோர்
அல்லது - அவன் தம்பிமார் ஐந்து பேர்மாத்திரமேயல்லாமல், புகன்ற நரபாலர்
எவர்உம்-(மற்றும் வீரவாதம்) கூறிய அரசர்களெல்லோரும், படாதவர் -
இறவாதவர்களாய், பருமம் மதம் மா புரவி தேர்கொடு - அலங்காரத்தையுடைய
மதயானைகளும் குதிரைகளும் தேர்களு மாகிய (தங்கள்) வாகனங்களைக்