பக்கம் எண் :

24பாரதம்வீட்டும பருவம்

மென்று பெயருள்ளதுமான வியூகமாக வகுக்கப்பட்ட தென்று வியாசபாரதங்
கூறுகின்றது. ஒரு வேஷத்தை மேற்கொண்டவன் அதற்குஉரிய
குணந்தொழில்களையெல்லாம் உடையனாகவேண்டுவது இயற்கை யாதலால்,
தேவாதிதேவனான திருமால் இங்குத் தான் கொண்ட மநுஷ்யாவதாரத்துக்கேற்பத்
துர்க்கையை வணங்கின னென்க. பற்று உடை அசலம் - (பகைவர்களது) வெல்லும்
ஆசையை ஒழிக்கிற அசலவியூகம் எனவுங் கொள்ளலாம்.            (17)

வேறு.

18.-முரசம் முழங்குதல்.

புரசை யானைப் பொருபரித் தேருடை
அரசன் மாத்துவ சத்தன வாதலாற்
குரைசெய் வான்பணைக் குப்பைகள் யாவினும்
முரச சால முழங்கின சாலவே.

     (இ - ள்.) புரசை - கழுத்திடுகயிற்றையுடைய, யானை- யானைகளையும்,
பொரு பரி - போர்செய்யவல்ல குதிரைகளையும், தேர் - இரதங்களையும், உடை-
உடைய, அரசன்-யுதிஷ்டிரராசனது, மா துவசத்தன ஆதலால் - பெருமையையுடைய
கொடியில் (தாம்) இருப்பனவாகையால், முரச காலம்-பேரிகைகளின் கூட்டங்கள்,
குரை செய்வான் பணை குப்பைகள் யாவின்உம்-ஒலித்தலைச் செய்கின்ற பெரிய
போர்ப்பறைகளின் கூட்டங்க ளெல்லாவற்றினும், சால முழங்கின- மிகுதியாக
ஒலித்தன; (எ - று.)

     பாண்டவசேனையில் இயல்பாக வெற்றிக்கு அறிகுறியாகவும் போரில்
ஊக்கத்தையுண்டாக்கி வளர்த்தற்பொருட்டும் முரசங்கள் அடிக்கப்பட்டு மிகுதியாக
முழங்குதலை, தலைவனானதருமனது கொடியில் தம்உருவம் எழுதப்
பெற்றுள்ளதென்ற செருக்கினாலாகிய களிப்பின் மிகுதியால் அதிகமாகமுழங்கினதாக
ஒரு காரணங்கற்பித்துவருணித்ததனால், இது, ஏதுத்தற்குறிப்பேற்றவணி. மதம்
பிடித்தகாலத்தில் யானையின்மேல் ஏறுதற்கு ஒரு ஆதாரமாக, எப்பொழுதும்
யானைக்கழுத்தில் கயிறுகட்டிவைத்தல் இயல்பு. காலாட்சேனையைஉபலக்ஷணத்தாற்
பெறவைத்தார். முரஜஜாலம் - வடசொற்றொடர்.

     இதுமுதற் பதினேழுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரொன்று மாச்சீரும்,
மற்றைமூன்றும் விளச்சீர்களுமாகிய கலிவிருத்தங்கள்.     (18)

19.-சங்குகளொலித்தல்.

மலர்ந்தபற்பவனநிகர்பைந்துழாய்
அலங்கல்வித்தகனேந்தினவாதலால்
வலம்புரிக்குலம்வாழ்வுபெற்றேமெனாச்
சலஞ்சலத்தொடுஞ்சங்கொடுமார்த்தவே.

     (இ - ள்) மலர்ந்த பற்பவனம் நிகர் - மலர்ந்த தாமரைக்காட்டை யொத்த,
பைந் துழாய் அலங்கல் வித்தகன் - பசுநிறமான திருத்துழாய் மாலையையணிந்த
ஞானசொரூபியான திருமாலின்.