பக்கம் எண் :

பத்தாம் போர்ச்சருக்கம்243

       (இ-ள்.) (அப்பொழுது), விசயன்-அருச்சுனன், போன திண் சிகண்டிதனை-
(அவ்வாறு) புறங்கொடுத்துச்சென்ற வலிய சிகண்டியை, மீளஉம் கொணர்ந்து -
மறுபடியும் அழைத்துக்கொண்டு வந்து, (அவனை நோக்கி), 'நீ-,அஞ்சல்-
பயப்படாதே; பொரு பூசல் உம் கடந்து-செய்தற்குரிய போரையும் மிகுதியாகச்
செய்யக்கருதி, இரதம்மேல்-தேரின்மேலே, நில் - (தைரியங்கொண்டு) எதிர்த்து நில்;
கணைஉம் ஏவுக-உனது அம்புகளையும்செத்துவாயாக', என்று-என்றுசொல்லி,
(அவனை முன் நிறுத்தி), வெம் சமரில்-கொடிய அப்போரிலே, நேர் நடந்து
சென்று-(தானும் வீடுமனை) எதிர்த்துப் போய், அங்கி தந்த கூன் நல் சிலை கோலி
- அக்கினி கொடுத்த வளைத்தற்குரிய அழகிய (தனது காண்டீவ) வில்லை
வளைத்து, அம்பொடு அம்பு பல கூட-(சிகண்டிவிடும்) அம்புகளுடனே (தனது பல)
அம்புகளும் சேர,-வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் -
வசந்தகாலத்துக்குரிய (மன்மதனது) பாணங்கள் முன்பு ஒரு பொழுதும்
பதியப்பெறாமல்
விளங்குகிற, அம் பொன் வரை மேனி எங்கண் உம்-அழகிய
பொன்மயமான மேருமலை போன்ற (வீடுமனது சிவந்த) உடம்புமுழுவதிலும்,
புதைய-தைத்து அழுந்தும்படி, நெஞ்சு அழன்று உதையினான்-மனத்திற்
கோபங்கொண்டு செலுத்தினான்; (எ-று.)

     துரியோதனாதியர்மேலுள்ள கோபம், அவர்கள்சேனைத்தலைவனான
வீடுமன்மேலும் சென்ற தென்க. இங்கே, திண்சிகண்டியென்றது-இகழ்ச்சி. ஈற்றடி -
வீடுமன் எப்பொழுதும் சிறிதும் காமவசப்படாதவ னென்பதை விளங்கும். வேனில்
என்பதைக் காலவாகுபெயராய், அக்காலத்துக்குரிய மன்மதனுக்குக் கொள்ளினும்
அமையும். பி - ம்: பலபூசலும். உகையினான்.
                      (357)

34.-வீடுமன் தன்னுடலிற்புதைந்தவை
அருச்சுனனம்பின் வலிமையாலென்று தெரிந்து மகிழ்தல்.

தோளுநெஞ்சமுஞ்சிரமுமார்பமுந்தொடங்கிநிலைதோறும்வந்துவந்துருவவே
சாளரங்கொளங்கவழியோடுகின்றவிந்துமுகசாயகங்கைகொண்டுபிடியா
நாளறிந்தெதிர்ந்துபொருவோனுமைந்தனன்றுமுதனாமமுஞ்சிகண்டியிவனெய்
வாளியொன்றுமிங்கெமையுறாதனஞ்சயன்செய்பெருவாழ்விதென்றறிந்துமகிழா.

இதுவும், மேற்கவியும் - குளகம்.

     (இ-ள்.) தோள்உம் நெஞ்சம்உம் சிரம்உம் மார்பம்உம்-, தொடங்கி - (என்னும்
இவ்வுறுப்புக்கள்) முதலாக, நிலை தோறுஉம் - உயிர்நிலைகளிலெல்லாம், வந்து
வந்து உருவ - (அம்புகள்) மிகுதியாக வந்து ஊடுருவிச்செல்ல, சாளரம் கொள் -
(முழுவதும் பலதுளைபட்டுப்) பலகணியின் தன்மையை அடைந்த, அங்கம்வழி-(தன்)
உடம்புவழியாக, ஓடுகின்ற-(அப்பாற்) செல்லுகிற, இந்து முகம் சாயகம் -
சந்திரன்போன்ற வடிவமுள்ள [அர்த்த சந்திர] பாணங்களை, கை கொண்டு பிடியா
- (தன்) கைகளாற் பிடித்து, (அவற்றில் பதிந்துள்ள அருச்சுனன்பெயரைப் பார்த்து),
'நாள் அறிந்து - (நாம் முன்புசொன்ன பத்தாம்போர்) நாளையறிந்து,