(ஆதலால்), தனி ஆண்மை பொன்றல் - தனியே உங்கள் பராக்கிரமம் அழிவடையவேண்டாம்', என்று கூறினன்-; (எ-று.) வீடுமனுக்கு உதவியாகப் போர்செய்யவந்த துரியோதனன் தம்பிமாரை நோக்கி வீடுமன் 'இனி நீங்கள் எனக்கு உதவிசெய்து பொருதலிற் பயனில்லை; நான் இன்று அழிவது நிச்சயம்; இனிச்செய்ய வேண்டுவதைப்பற்றி உங்கள் தமையனோடு ஆலோசித்துச் செய்யுங்கள்; இப்பொழுது அருச்சுனனையெதிர்த்து வீணாய்வலிமைகெடாதிர்' என்று அறிவுகூறினான். தனது சேனைத்தலைமை யொழிந்ததை 'நாளுமின்று' என்றதனாலும், 'தனி' என்றதனாலும், வீடுமன் விளக்கினான். பதம்-பாதமென்றலுமாம். பொன்றல் - எதிர்மறைவியங்கோள். கோமடங்கல் - அரசரிற்சிறந்தவன்; பகையை எளிதில் ஒழிப்பவன். பனை + கொடி= பனங்கொடி; [நன், உயிர், 53.] நாளும் இன்று என்பதற்கு - (நாம்வாழும்) நாளும் (இனி) இல்லை எனினும் அமையும். (359) 36,-அம்பாகிய அணையில் வீடுமன்சாயத் தேவர்கள் கற்பகமலர்மாரிபொழிதல். கோடுகொண்டசெம்பவளநாதம்வந்துவந்துசெவிகூடமுன்புநின்றநிலையே நாடிநெஞ்சழிந்துதிருநாமமன்புடன்றனதுநாகுழன்றுகொண்டுநவிலா வோடுகின்றவம்பொழியநீடுடம்படங்கமுனையூரநின்றவம்பொரணையா வீடுமன்கிடந்தகிடைதேவர்கண்டுவந்தனர்கண்மேல்விழுந்ததம்பொன் மலரே. |
(இ-ள்.) செம் பவளம் - சிவந்தபவழம்போன்ற (கண்ணபிரானது) திருவாய்மலரிலே, கொண்ட - வைத்து ஊதப்பட்ட, கோடு - (பாஞ்சசன்னியமென்னும்) சங்கத்தினது, நாதம்-ஒலி, வந்து வந்து செவி கூட - மிகுதியாகவந்து (தனது) காதுகளிலே பொருந்த,-வீடுமன்-,-முன்பு நின்ற நிலைஏ நாடி - எதிரில் [அருச்சுனனது தேரின் முன்னே] (கண்ணபிரான்) எழுந்தருளி நின்ற நிலைமையையே நெஞ்சிற்கொண்டு [தியானித்து], நெஞ்சு அழிந்து - மனமுருகி, திருநாமம் - (அக்கண்ணபிராணது) திருப்பெயர்களை, அன்புடன் - பக்தியோடு, தனது நா குழன்று நவிலா கொண்டு - தனது நாக்குத் தழுதழுக்கச் சொல்லிக்கொண்டு, ஓடுகின்ற அம்பு ஒழிய நீடு உடம்பு அடங்க முனை ஊர நின்ற அம்பு ஓர் அணை ஆ - (ஊடுருவி அப்பால்) ஓடுகிற அம்புகள் ஒழிய(த் தனது) நீண்ட உடம்புமுழுவதிலும் ஒருமுனை பொருந்த நின்ற அம்புகளையே ஒருபடுக்கையாகக்கொண்டு, கிடந்த - (அந்த அம்பாகிய அணையில்) விழுந்துகிடந்த, கிடை - கிடக்கையை, தேவர் கண்டு - தேவர்கள் பார்த்து, உவந்தனர்கள் - மகிழ்ந்தார்கள்; அம் பொன் மலர் - (அங்ஙனம் மகிழ்ந்த தேவர்களாற் சொரியப்பட்ட) அழகிய பொன்மயமான (கற்பக) மலர்த்தொகுதி, மேல்விழுந்தது; - (அந்த வீடுமன்) மேல் விழுந்தது; (எ-று.) தன் உடம்பை ஊடுருவி நீங்கின அம்புகள் ஒழிய, மார்பில்தைத்து முதுகின்வழி புறப்பட்டு நிற்கும் அம்புகளின்மேல் விழுந்திட்டனனென்பது, மூன்றாமடியின் கருத்து. பக்திமிகுதியாலும், |