பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்25

வடிவமான கண்ணபிரானால், ஏந்தின - (கையிற்) பிடிக்கப்பட்டவை, ஆதலால்-,
வாழ்வு பெற்றேம் எனா-சிறப்புப்பெற்றோ மென்று களித்து, வலம்புரி குலம் -
வலம்புரிச் சங்குகளின் கூட்டங்கள், சலஞ்சலத்தொடுஉம் - சஞ்சலமென்னுஞ்
சங்குகளோடும், சங்கொடுஉம்-இடம் புரிச்சங்குகளோடும், ஆர்த்த -
ஒலித்தன;(எ-று.)

     வலம்புரிச்சங்குகளின் மிக்க முழக்கத்திற்கு, கண்ணன்கையிலிருப்பது
நம்மினமேயென்ற களிப்பைக் காரணங் கற்பித்ததனால், இப்பாட்டும் -
ஏதுத்தற்குறிப்பேற்றவணி.நிகர் வித்தக னென இயையும். திருக்கண்கள்
திருக்கைகள் திருவடிகள் திருமுகம்திருவாய் திருவுந்தி முதலிய
அவயவங்களெல்லாம் செந்தாமரைமலர் போலுதலால்,திருமாலின் திருமேனிக்குத்
தாமரைக்காட்டை உவமை கூறியது; "கைவண்ணந்தாமரை வாய்கமலம் போலுங்
கண்ணிணையு மரவிந்த மடியு மஃதே" எனத்திருநெடுந்தாண்டகத்திலுங் காண்க.
பற்பவனம் - பத்மவநமென்றவடசொல்திரிபு.துழாய் - துளஸீ: வடமொழி.
அலங்கல் - தொங்கியசைவது என மாலைக்குக்காரணக்குறி: இதில், அல் -
கருத்தாப்பொருள்விகுதி. திருமாலின் கையிலுள்ளது -பாஞ்சசந்நியமென்னும்
வலம்புரிச்சங்கு. ’வலம்புரிச்சங்கு. ’வலம்புரி, சலஞ்சலம்.இடம்புரி என்பன -
சங்கின்சாதிபேதம். "இப்பி யாயிரமே சூழ்ந்த திடம்புரி யென்றுகூறு, மொப்பில்சங்
காயிரஞ்சூழுறும் வலம்புரி யென்றேதும், அப்படி யதுவுஞ் சூழ்ந்தசலஞ்சல
மாகுமற்றைத், தப்பிலாச் சலஞ்சலங்கள் சார்ந்தது பாஞ்சசன்னியம்" என்ற
நிகண்டுசெய்யுளால், இவற்றில் ஒன்றினு மொன்று ஆயிரமடங்கு சிறந்ததென
உய்த்துணர்க. வலம்புரி - வலப்பக்கமாக உட்சுழிந்திருக்குஞ் சங்கு.       (19)

20.-இருபுறத்துச்சதுரங்கசேனைகளும் ஒன்றையொன்று
எதிர்த்தல்.

சென்றுதேர்களுந்தேர்களுஞ்சேர்ந்தன
வென்றிவேழமும்வேழமுமூர்ந்தன
நின்றவாசியும்வாசியுநேர்ந்தன
வென்றிவீரரும்வீரருமேவினார்.

     (இ - ள்.) (இரண்டுசேனைகளிலும்), தேர்களும் தேர்களும்-, சென்று
சேர்ந்தன- போய் (ஒன்றொடொன்று) நெருங்கின; வென்றி-சயத்தையுடைய,
வேழம்உம்வேழம்உம் - யானைகளும்யானைகளும், ஊர்ந்தன - (ஒன்றோடொன்று
எதிர்த்து)நடந்தன; நின்ற- தவறாது நின்ற, வாசிஉம் வாசிஉம் - குதிரைகளும்
குதிரைகளும்,நேர்ந்தன - (ஒன்றோடொன்று) எதிர்த்தன; வென்றி-சயத்தையுடைய,
வீரர்உம்வீரர்உம் - காலாள் வீரர்களும் காலாள் வீரர்களும், மேவினார்-
(ஒருவரோடு ஒருவர்)பொருந்தினார்; (எ-று.)

     தேர் யானை குதிரைகள், இங்கு அவற்றின்மீது ஏறியுள்ள வீரரையுங்
குறிக்கும்.வாஜி - வடசொல்.                                   (20)

21.-இதுமுதல்நான்குகவிகள் - இருபுறத்தவரும்
கைகலந்து பொருதலைக் கூறும்.

பாரவாளமும்வாளமும்பாய்ந்தன           
கூரவேல்களும்வேல்களுங்குத்தின