45.-யுதிட்டிரன் வீடுமனுக்குத் தங்குமிடம் அமைக்க, அங்கு அவன் உத்தராயணகாலத்தை நோக்கியிருத்தல் கோயிறருமன்செய்யக்கூர்வெஞ்சரமேயணையா நோயிலயர்வுமெய்யினுழையக்காலநோக்கி வீயின்முத்தியில்லையென்னவிருந்தான்விருந்தாய்ச் சேயின்முதியகேள்வித்தெள்ளாரமுதநுகர்வான். |
(இ-ள்.) சேயின் - முருகக்கடவுள்போல், முதிய கேள்வி தெள் ஆர் அமுதம் - பழமையானநூற்கேள்வியாகிய தெளிவான அரிய அமிருதத்தை, விருந்து ஆய நுகர்வான் - புதிதுபுதிதாக அமுதுசெய்பவனாகிய வீடுமன்,-தருமன் கோயில் செய்ய-(தனக்குத்) தங்குமிடத்தை யுதிட்டிரன் ஒழுங்காக அமைக்க, கூர் வெம்சரம்ஏ அணைஆ - கூர்மையானகொடிய அம்புகளையே படுக்கையாகக்கொண்டு, நோய் இல் அயர்வுஉம் மெய்யில் நுழைய-பிணியில்லாமலே தளர்ச்சியும் உடம்பில்தோன்ற, வீயின் முத்திஇல்லை என்ன - (தக்ஷிணாயநமாகிய இப்பொழுது) இறந்தால் முத்திகிடையாதென்று கருதி, காலம் நோக்கி - (உத்தராயணம்வருங்) காலத்தை எதிர்நோக்கி, இருந்தான் - பிழைத்திருந்தான்; (எ-று.) சுப்பிரமணியமூர்த்தி கல்வி கேள்விகளில் மிகச்சிறந்தவரென்பது பிரசித்தம் நோயில்யாவும் என்றும் படிக்கலாம்: அங்ஙனம் படிப்பின், நோய் இல் - துன்பந்தராமல், யாவும் - அம்புகளெல்லாம் மெய்யினுழைய என்க: சுத்தவீரனும் பற்றற்றவனுமான வீடுமன், தன் உடம்பில் அம்புகள் பதிந்த வருத்தத்தைப் பொருளாகக் கருதாமல், அப்புண்களை ஆற்றும் பொருட்டு நல்லவைத்தியர்கள் சிறந்தமருந்து முதலியவற்றோடு வந்ததையும் மறுத்து, அத்துன்பத்தையே இன்பமாகப் பாவித்த மனத்தூய்மை தோன்ற, 'நோயில் யாவுமெய்யினுழைய' என்றார்; இத்தன்மை முதனூலால் நன்குவிளங்கும்: இதற்கு, நோயில் என்பதில், இல்என்னும் பகுதியே வினையெச்சத்தன்மை பட்ட தென்றாவது, இன்றி என்பது இல்என விகாரப்பட்டதென்றாவது இலக்கணமறிக: திருமாலையில் "காவலில் புலனைவைத்து'' என்றவிடத்து, இல் என்பதற்கு-இல்லாதபடி யென்று ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான மிட்டருளி யிருத்தல்காண்க. அமிருதம் நாவுக்கு இனிமை தருதல்போல, நூற்கேள்வி செவிக்கு இனிமை தருதலால், 'கேள்வித் தெள்ளா ரமுதம்'' என்றது. (369) 46.-சூரியாஸ்தமன வருணனை. இன்றுன்மைந்தன்பட்டானென்றுதந்தைக்கிசைப்பான் சென்றுபரிதிமேலைத்திக்கினெல்லைசேர்ந்தான் அன்றுவருணனன்பாலழுதசெந்நீராறாய் மன்றவெங்கும்பரந்ததொக்குஞ்செக்கர்வானம். |
(இ-ள்.) இன்று உன் மைந்தன் பட்டான் என்று-இன்றைக்கு உனது மகன் அழிந்தா னென்று, தந்தைக்கு இசைப்பான் - (வீடுமனது) தந்தையாகிய வருணனுக்குக் கூறும்பொருட்டு, பரிதி- |