(இ -ள்,) அருக்கன் - சூரியன், வருணன் மைந்தன் பாடு வருணற்கு உரைத்து-வருணனுக்குக்குமாரனானவீடுமன் அழிந்ததை (முந்தினநாள்மாலையில்) வருணனுக்குச் சொல்லி, மீள - பின்பு, தருணம் மைந்தன் விசயம் சதமகத்தோன் கேட்ப - இளமையையுடைய மகனான அருச்சுனனது வெற்றியை (அவன் தந்தையான) இந்திரன் கேட்க(ச்சொல்லும்படி), இருள் நிறைந்த கங்குல் ஏங்கி முன்னேஓட)-இருட்டு நிறைந்த இராத்திரி பயந்து முன்னே ஓட பொன் தேர் அருணன் தூண்ட-(தனது) அழகியதேரை அருணன் செலுத்த, குணபால் அடைந்தான் - கீழ்திசையைச்சேர்ந்தான்; (எ-று.) தற்குறிப்பேற்றவணி. கீழ் நாற்பத்தாறாங்கவியிற் கூறியதை இப்பாட்டின் முதலில் அனுவதித்தார். சதமகத்தோன்-நூறு (அசுவமேத) யாகங்களைச் செய்தவன். கேட்ப, ஓட, தூண்ட, அடைந்தான் என்க. (377) பத்தாம்போர்ச்சருக்கம் முற்றிற்று. வீ ட் டு ம ப ரு வ ம் முற்றுப்பெற்றது. ----------- |