தவர்-படைத்தலைவர்கள், சாயகம் ஏவினார் - அம்புகளைச் செலுத்தினார்கள்; (எ- று.) மந்த்ரம் - ஆலோசனை, தந்த்ரம் - சேனை: அவற்றையுடையவர், மந்திரியுந் தந்திரியுமாவர். ஸாயகம் - வடசொல். மாமதி-மத்திமதீபம். (23) 24. | மாண்டலீகர்தம்மார்புறையாகவே மண்டலீகர்தம்வாட்படையோச்சினார் சண்டவார்சிலைசாமந்தர்வாங்கவே சண்டவார்சிலைசாமந்தர்வாங்கினார். |
(இ-ள்.) மண்டலீகர்தம் மார்பு உறை ஆக - மண்டாலதிபதிகளான அரசர்களதுமார்பு உறையாக இருக்கும்படி, மண்டலீகர்-, தம் வாள்படை ஓச்சினார் - தங்களது வாளாயுதத்தை வீசினார்கள்; சாமந்தர் - சாமந்தராசர்கள், சண்டம்வார் சிலை வாங்க- உக்கிரமான நீண்ட வில்லை வளைக்க, (அவர்க்குஎதிரில்), சாமந்தர் சண்டம்வார்சிலை வாங்கினார்-; (எ - று.) மண்டலீகன் - நாற்பதுகிராமம் ஆள்பவன்: ஒருகோடி கிராமம் ஆள்பவன் மகுடவர்த்தனனென்றும், மகுடவர்த்தனர் நாலாயிரவரை வணக்கியாள்பவன் மண்டலீகனென்றும் ஒருசாரார் கூறுவர். ஓரு பேரரசனுக்குக் கீழ்ப்பட்டு அவனுடையநாட்டின் கடைக்கோடியையாளுஞ் சிற்றரசர்க்கு ஸாமந்தரென்று பெயர்; வடசொல். உறை - படைக்கூடு; (ஆயுதங்கள்) உறுவது உறை யெனக் காரணப்பெயர். தமதுவாள் முழுவதும் பிறரதுமார்பினுள்ளே சென்று நுழையும்படி வீசின ரென்பார், 'மார்பு உறையாக ஓச்சினார்' என்றார். (24) 25.-இதுவும் அடுத்த கவியும் - அடிபட்ட வீரரின் வருணனை. முடியிழந்தநிருபர்முகுந்தனால் இடிபடுந்தலைராகுவொடேயினார் அடியிழந்தவராதபன்றேர்விடுந் தொடிநெடுங்கைவலவனிற்றோன்றினார். |
(இ - ள்.) (அவ்யுத்தத்தில்), முடி இழந்த நிருபர் - தலையறுபட்ட அரசர்கள், முகுந்தனால் இடிபடும் தலை ராகுவொடு ஏயினார்-திருமாலால் துணிக்கப்பட்ட தலையையுடைய இராகுவோடு ஒத்தார்கள்; அடி இழந்தவர் - கால்களை இழந்தவர்கள், ஆதபன் தேர் விடும் தொடி நெடுகை வலவனின் தோன்றினார் - சூரியனது தேரைச் செலுத்துகிற தொடியென்னும் அணியையணிந்த கைகளையுடையசாரதியான அருணன்போலக் காணப்பட்டனர்; (எ - று.)- உவமையணி. ஆதபன் - நன்றாகத் தபிப்பவன்; தபித்தல் - காய்தல். தேரோட்டுவதில் அவனுக்குள்ள கைத்திறமையை விளக்க, 'தேர்விடுந்தொடி நெடுங்கை வலவன்' என்றார். வலவன் - வல்லவன்; இன்-ஐந்தனுருபு, ஒப்புப் பொருளது. இராகுவொடு என்பதில், மூன்றனுருபு - ஐந்தாவ |