பக்கம் எண் :

28பாரதம்வீட்டும பருவம்

தற்குரிய ஒப்புப்பொருளில் வந்தது, உருபுமயக்கம். ஏயினார், ஏய்-பகுதி, இன்-
இறந்தகால இடைநிலை; இப்பகுதியினடியாகச் செயவெனெச்சம் 'ஏய்ப்ப' என
வருதல்காண்க.

     துருவாசமுனிவரது சாபத்தால் கடலினுட்புக்கொளித்த தேவலோ
கத்துச்செல்வங்களை மீண்டும்பெறும்பொருட்டுத் திருமாலின் கட்டளையால்
தேவர்கள் அசுரர்களைத் துணைக்கொண்டு பாற்கடல் கடைகையில் உண்டான
அமிருதத்தை அத்திருமால் தாம் எடுத்து. மிக அழகிய மோகினியென்னும்
பெண்வடிவத்தால் அசுரர்களை மயக்கி, அமரர்களுக்குப்
பங்கிட்டுக்கொடுத்தருளுகையில். இராகு வென்னும் ஓரசுரன்  தானிருத்தற்குரிய
அவுணர்கூட்டத்தைவிட்டுத் தேவர்கோட்டியினிடையிலேபுக்குக் கையேற்று
அமிருதத்தை வாங்கியுண்ண, அதனைச் சூரியசந்திரர் குறிப்பித்தமாத்திரத்தில்,
எம்பெருமான் அவனை அகப்பையாலடித்துத் தலைவேறு உடல் வேறாக்க,
அமிருதமுண்டதனால் உயிர்நீங்காத அத்தலையும் உடம்பும், விஷ்ணுவின்
அனுக்கிரகத்தால் இராகுகேதுக்களென இரண்டு கிரகங்களாகிச் சூரியன்முதலிய
ஏழுகிரகங்களோடு சேர்ந்து, சிற்சிலகாலத்து, தம்மேற் கோள்சொன்ன
சூரியசந்திரர்க்குப் பகையாய் அவர்களை மறைக்கின்றன என்பது,
முன்னிரண்டடியிற்குறித்த கதை.
படைத்தல் தொழிலில் தனக்கு உதவியாகும்
படி பிரமனாற்படைக்கப்பட்ட உபப்பிரமர் ஒன்பதின்மரில் ஒருவனாகிய
காசியபமுனிவனதுமனைவிமார்கள் பலருள் கத்துரு என்பவள், ஒருநாள்
ஆகாசமார்க்கத்தே சென்றஉச்சைச்சிரவ மென்னும் வெள்ளைக்குதிரையைக்
கருநிறமுடையதென்றுமாறுபாடாகக் கூற, அதனைமறுத்து விநதை
வெண்ணிறமுடையதென்று உள்ளபடிகூறவே, இதுகாரணமாக இருவர்க்கும்
மாறுபாடுண்டாகி 'யாருரை பொய்யாகிறதோஅவள் மற்றவட்கு அடிமையாகக்
கடவள்' என்று தம்மில் சபதம் நியமித்துக்கொள்ள,கத்துரு தனது மக்களாகிய
கருநாகங்களால் அவ்வெண்பரியை மறைப்பித்துக்காட்டிவஞ்சனைவழியால்
விநதையைத் தனக்கு அடிமையாக்கி 'நீ உன்மகனால்தேவலோகத்திலிருந்து
அமிர்தங்கொணர்ந்து என்மக்களுக்குக் கொடுக்கையில், உனதுஇவ்வடிமைத்
தன்மை ஒழியும்' என்று விடைகூற, பின்பு விநதை தன்கணவனருளால் ஆயிரம்
வருஷகாலங்கழித்துப் பலிக்கும்படியான இரண்டுஅண்டங்களைப் பெற்று
அடைக்காத்துவருகையில், ஐந்நூறுவருஷங் கழிந்தவாறேஒருநாள் 'பெண்புத்தி
பின்புத்தி' ஆதலால் தனது அடிமைத்தனத்தைவிரைவில்ஒழித்தலிலே
கருத்துக்கொண்டு ஒரு முட்டையை யெடுத்து உடைக்க,அதனுள் காலம்
நிரம்பாமையால் இடைக்குக்கீழ்ப்பட்ட அவயவங்களில்லாமல்
பாதிவடிவமாயிருந்த குமாரனொருவன் தோன்றி, அருணனெனப் பெயர்பூண்டு
சூரியனுக்குச் சாரதியாயின னென்பது, பின்னிரண்டடியிற் குறித்த கதை. இவன்,
கருடனது தமையன்.                                           (25)

26.பூபர்தங்கள்புயங்களுமார்பமுஞ்
சாபவெங்கணைதைத்துகுசோரியால்
தீபமென்னவுஞ்செம்மலர்க்கோடுடை
நீபமென்னவுநின்றனராண்மையால்.