பாதமில்லாமற் சிறப்பித்துக் கூறியிருக்கின்றார். (தம்மையாதரித்தவக்கபாகை வரபதியாட்கொண்டானை ஆங்காங்கு உபமானமுகத்தாற் சிறப்பித்துக் கூறியுள்ளார்.) கடைச்சங்கப்புலவர்களுள் ஒருவராகிய பெருந்தேவனாரென்பவர் பாரதம்பாடியுள்ளார். அந்நூலுள் பழையஉரைகளிற் கிடைக்கின்ற சிலபாடல்களன்றி, மற்றையவை காணப்படவில்லை. பிறகு ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் நந்திவர்மன் காலத்துப் பெருந்தேவனாரென்று பெயர்வழங்கப்பெற்ற ஒருவர் மகாபாரதத்தைத் தமிழில் வசனமும் பாடலுமாக விரவிவருகிற 'சம்பு' என்கிற நடையிலே பாடியிருக்கின்றனர்; பெரும்பாலும் வெண்பாக்களால் அமைந்ததுபற்றி, அந்நூலுக்குப் பாரதவெண்பாவென்று பெயர். அதிற் சிலபகுதிகளே இப்போது கிடைக்கின்றன. 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அரும்பாக்கத்து அருணிலைவிசாகன் பாரதத்தை இனிய செந்தமிழ்படுத்தினான் என்று திருவாலங்காட்டுச் சாசனம் கூறும்; இந்நூல் வழக்கு வீழ்ந்ததுபோலும். இவ்வில்லிபுத்தூரார் நாலாயிரத்து முந்நூற்றுச் சொச்சம் பாடல்களாற் பாரதத்தைப் பாடினார். இவர் பாடிய பாரதம் வடமொழி வியாச பாரதத்தின் வழிநூலென்னத்தட்டில்லை: "மண்ணிலாரண நிகரெனவியாதனார் வகுத்த, எண்ணிலாநெடுங்காதையை யானறிந்தியம்பல்" என்று இவர்தாமே அவையடக்கத்திற்கூறியிருப்பது காண்க. இப்பாரதத்துக்கும் இதன்முதனூலாகிய வியாசபாரதத்துக்கும்இடையிடையே கதையமைதிகள் சிற்சில வேறுபடுவது "முன்னோர் நூலின்முடிபொருங்கொத்துப், பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி, அழியாமரபினதுவழிநூலாகும்" என்ற வழிநூலிலக்கண விதிப்படி இவ்வாசிரியராற் பிறநூல்மேற்கோள்கொண்டு அமைக்கப்பட்டதாதல் வேண்டுமென அறிக: வடமொழியில்அகஸ்த்யபட்ட ரென்பவர் செய்த பாலபாரதத்தோடு இந்நூல் பலவிடங்களிலும்ஒத்திருக்கின்றது: ஆயினும், நூலாசிரியர் தமது பாரதத்துக்குப் பாலபாரதத்தைமுதனூலென்று சொல்லவில்லை. வில்லிபுத்தூரார் தமது பாரதத்திற் பாடியது, முதற்பத்துப் பருவமே; மற்றையெட்டுப்பருவங்கள் அவராற் பாடப்படவில்லை. அதற்குக் காரணம்:-நூல் முழுவதையும்பாடினால், பாண்டவர்கள் கிருஷ்ணபகவான் என்கிற மகாபுருஷர்களது மரணசரித்திரத்தைத் தம் வாயாற் சொல்லவேண்டுமே யென்று கருதி, "கனை கடற்பா ரளித்து அவரு மந்நகரி லறநெறியே கருதிவாழ்ந்தார்" என மங்களகரமாகச் சரித்திரத்தைப் பாடிமுடித்தனரெனக்கொள்வது தகுதியுடையது. வில்லிபுத்தூரார்பாடிய பாரதத்திலே சுருக்கமாகக் கதையைத் தொகுத்துக்கூறும் முந்நூறு நானூறு பாடல்கள் தவிர மற்றை நாலாயிரஞ் செய்யுட்களை யெடுத்துக் கொண்டு, பிற்காலத்தில் நல்லாப்பிள்ளை யென்பவர், புதிதாகத் தாம் பதினோராயிரம் பாடல்பாடி இடையிடையிற் கோத்தும், இறுதியிற் சேர்த்தும் பாரதம் பதினெட்டுப் பருவங்களையும்பூர்த்தி செய்தார்; அது 'நல்லாப்பிள்ளைபாரதம்' என வழங்கும்: அந்நூலாசி |