லாகிய காரணத்தாற் குறித்தது உபசாரவழக்கு. பொய்யில் ஆம்மொழி பூபதி என எடுத்தால், பொய்யின்பாற்பட்ட சொற்களையுடைய ராஜராஜனான துரியோதன னென்று ஆகும். ஆண்மை - பௌருஷம். சில - குறிப்புப்பெயரெச்சம். (27) 28. | வலக்கையற்றுவிழவுமனத்தொரு கலக்கமற்றவெங்கார்முகத்தார்சிலர் துலக்கெயிற்றுக்கணைதொடுத்தார்தொடை யிலக்கமற்றபடையிலக்காகவே. |
(இ-ள்.) வலம்கை அற்று விழஉம் - (தமது) வலக்கை (எதிரிகள் வழங்கின ஆயுதங்களால்) அறுந்து விழவும், மனத்து ஒரு கலக்கம் அற்ற- (தம்) நெஞ்சிலே (தைரியநிலைமை) கலங்குதல் சிறிதுமில்லாத, வெம் கார்முகத்தார் - பயங்கரமான வில்லையுடையவர்களாகிய, சிலர் - சிலவீரர்கள்,-தொடை - தொடச்சியாகவுள்ள, இலக்கம் அற எண்ணில்லாத, படை - (பகைவர்) சேனைகள், இலக்கு ஆக - எய்யுங் குறியாக, துலக்கு எயிறு கணை தொடுத்தார் - விளங்குந்தன்மையுள்ள (தமது) பற்களால் அம்புகளை (வில்லில்) தொடுத்து எய்தார்கள்; (எ-று.) வலக்கையற்றவர், அம்பெய்யக் கையில்லாமையால், பல்லால் தூணியிலிருந்து அம்புகளையெடுத்து இடக்கையிற்பிடித்துள்ள வில்லில் தொடுத்தனரென்பதாம். இது - போரில் அவர்களுக்கு உள்ள ஊக்க மிகுதியை விளக்கும். தொடை - போர்மாலையைச்சூடிய என்றுமாம். கார்முகம் - வடசொல்; தொழிலில் வல்லதென்று அவயவப்பொருள். துலக்கு - முதனிலைதிரிந்த தொழிற்பெயர். தொடை-தொடுத்தல்; ஐ - விகுதி. இலக்கு-லக்ஷ்யம்; வடசொல். இலக்கமற்ற........இலக்காக - முரண்தொடை.'துலக்கெயிற்றுப்படை' என்று பிரதிபேதம். (28) 29. | தாளிரண்டுடைச்சிங்கமன்னார்சமர் வாளிரண்டொர்தொடையினில்வாங்கினார் கோளிரண்டுமெனக்குறுகார்தடந் தோளிரண்டுந்துணிந்தெதிர்வீழவே. |
(இ-ள்,) தாள் இரண்டு உடை சிங்கம் அன்னார்-இரண்டுகால் களையுடைய சிங்கத்தைப் போன்ற சிலவீரர், சமர்-போரில், குறுகார் தட தோள் இரண்டுஉம் - பகைவர்களது பெரிய இரண்டு தோள்களும், கோள்இரண்டுஉம் என - (ராகுகேதுக்களாகிய) இரண்டு கிரகங்கள் போல, துணிந்து எதிர் வீழ - அறுபட்டு எதிரிலே விழும்படி, வாள் இரண்டு ஓர் தொடையினில் வாங்கினார்- இரண்டுவாளாயுதங்களை ஒருவீச்சில் வீசினார்கள்; (எ-று,) சமகாலத்தில் எதிரியின் இரண்டுதோளும் அற்றுவிழும்படி இரண்டு வாள்களையெடுத்து ஒருங்குவீசினரென்பதாம். இதிலும் ஊக்கமிகுதி விளங்கும். தாளிரண்டுடைச் சிங்கம் - இல்பொருளுவமை: எந்தப்பிராணியையுந் தவறாதுகொல்லவல்ல தன்மையிலும், பிறர்க்கு அதிபதியாகுந்தலைமையிலும் சிங்கமாகிய விலங்கை. |