விரைந்துதொழில்செய்பவரது உடம்பு தலையறுபட்டபின்பும் சிறிது பொழுது முன்னையதொழிலை விடாதுசெய்தல், இயல்பு: "கைகொடு கால் கொடு தம்மின் வெகுண்டு கவந்த மலைந்தனவே," "தழல் விழி வாரண வீரர் முடித்தலை தடிவன சக்கரமே, யழலுமிழ் வாள்கள் சுழற்றின மீளவு மாவன சக்கரமே," "கருமுகில் முட்டின பட்டவர் கட்கனல் காலுமரும்புகையே" என்பர் மேற் பதினாறாம்போர்ச்சருக்கத்தும். சுந்தோபசுந்தர்போல இருவரும் ஒருவரால் ஒருவர் அடிபட்டு ஒருங்குஒழிந்தனரென்க. "அடுசிலைபகழிதொடுத்து விடப்புகு மளவினி லயமெதிர்விட்டவர் வெட்டின. ருடல்சிலவிரு துணிப்பட்டன பட்டபினொருதுணி கருது மிலக்கை யழிக்குமே" என்ற கலிங்கத்துப்பரணிச் செய்யுளோடு இதை ஒப்பிடுக. இனி, அவனும்- அத்தலையற்றவனும், அற்ற தன் தலை கொண்டு - அறுந்த தனது தலையினால், தனை செற்றவன் தலை சிந்திட வீசினான் - தன்னையழித்தவனது தலைசிதறும்படியெறிந்தானென்று உரைப்பாருமுளர்; என்றது, தலையறுந்த முண்டம் அத்தலையைக் கையிலெடுத்து எறிந்து எதிரியின் தலையை அழித்ததென்றவாறாம்; இது அசம்பாவிதமெனத் தோற்றலாம். (31) 32.-மூன்றுகவிகள்-போர்வீரர்களின் ஆண்மைச்செயலைக் கூறும். புங்கமெய்புதையப்புதையச்சிலர் சிங்கமென்னச்செருக்களத்தாடினார் கங்கமிட்டபைங்காவணநீழலில் அங்கைகொட்டியலகைநின்றாடவே. |
(இ-ள்.) கங்கம் இட்ட - கழுகுகளாற் செய்யப்பட்ட, பை காவணம் - குளிர்ச்சியான பந்தலின், நீழலில்-நிழலிலே, அலகை- பேய்கள், நின்று-, அம் கை கொட்டி - உள்ளங்கைகளைத் தட்டிக் கொண்டு, ஆட - கூத்தாடாநிற்க, செரு களத்து - போர்க்களத்தில், சிலர் - சிலவீரர்கள், புங்கம் மெய் புதைய புதைய - அம்புகளின்கூர்நுனி (தம்) உடம்பிலே மிகுதியாகத் தைத்தழுந்தவும், சிங்கம் என்ன -சிங்கங்கள்போல, (பராக்கிரமசாலிகளாய்), ஆடினார் - போர்செய்தார்கள்; போரில் உயிர்நீங்கின உடல்களைத் தின்னவந்த கழுகுகள் அகாயத்தே இடைவிடாமற் பரவிப் பந்தல்போகட்டாற்போன்றன என்பது மூன்றாமடியின்கருத்து; போர்க்களத்திற் பேய்கள் தங்கட்கு இரையாகப் பிணங்கள் மிகுதியாகக் கிடைத்தலால்,வந்து மகிழ்ந்து கூத்தாடுதல் இயல்பு. புங்கம், கங்கம் - வடசொற்கள். பைங்காவணம்என்பதில், பசுமை - குளிர்ச்சியின்மேலது. நீழல் - நீட்டல். அங்கை கொட்டுதலைத்தாளவொற்றாகக் கொள்க. ஆடினார் என்பதற்கு - அவற்றுடன் கூத்தாடி நின்றார்என்றும் உரைக்கலாம்: என்றது, கோபத்தோடு விரைந்துபோர் செய்துநின்றவீரர்களது உடல் தலையறுபட்டபின் பதைபதைத்துக் கைகால் துடிப்பதையாம். (32) 33. | வாளியாயிரந்தைத்தவழியெலாம் ஓளியாகவொழுகுங்குருதியால் |
|