பக்கம் எண் :

முதற் போர்ச்சருக்கம்33

தாளிலானடத்துந்தடந்தேருடை
மீளியாமெனநின்றனர்வீரரே.

     (இ - ள்.) வாளி ஆயிரம் தைத்தவழி எலாம் - (தம்உடம்பில் பகைவர்எய்த)
பலபாணங்கள் தைத்த துளைகளொல்லாவற்றிலிருந்தும், ஓளி ஆக ஒழுகும் -
ஒழுங்காகப்பெருகுகிற, குருதியால்-இரத்தத்தால், வீரர் - சில வீரர்கள், தாள்
இலான்நடத்தும் - கால்களில்லாத அருணனாற் செலுத்தப்படுகிற, தட தேர்
உடை-பெரியஇரதத்தையுடைய, மீளி என - பெருமையிற்சிறந்த சூரியன் போல,
நின்றனர் -நின்றார்கள்; (எ-று,)

     தன்மைத்தற்குறிப்பேற்றவணி. மிக்க செந்நிறமுடைமைபற்றி வந்தது.
சூரியனுக்குக் கிரணங்கள் ஆயிரமாதலால், 'வாளியாயிரந்தைத்தவழியெலா
மொழுகுங்குருதி' எனப்பட்டது. வாளியாயிரம் என்பதில், ஆயிரம் என்பது -
மிகப்பலவென்னுமாத்திரமாய் நிற்கும். ஓளியாக - இடைவிடாது தொடர்ச்சியான
தாரைகளாக என்றபடி. தொடைகளில்லாமைபற்றி, அருணனுக்கு வடமொழியில்
'அநூரு' என்று ஒருபெயர் உண்மையின், 'தாளிலான்' என ஒருபெயர் கூறினார்.
சூரியனுடைய ரதம் பதினாயிரம் யோசனை விசாலமுள்ள தாதலின், 'தடந்தேர்'
எனப்பட்டது. ஆம் - ஆசை.                                   (33)

34.வெட்டி னாரவர் மெய்யிற் படாமைநின்
றொட்டி னாரிமைப் போதினி லோடியே
தட்டி னாருடலைத் தழுவிக் கொடு
கட்டி னார்விழுந் தார்சில காளையர்.

     (இ-ள்.) சில காளையர் - சிலவீரர்கள், வெட்டினார் - (பகைவரால்)
வெட்டப்பட்டார்கள்; ஓட்டினார் - (தாம் பகைவரைக் கொல்வதாக முன்னே)
சபதஞ்செய்தவர்களாகிய, அவர் - அவ்வீரர்கள், மெய்யின் படாமை நின்று -
அந்தச்சபதவுண்மையினின்றுந் தவறாமல் நிலைநின்று, இமை போதினில் ஓடி -
ஒருமாத்திரைப்பொழுதினுள்ளே விரைந்து சென்று, தட்டினார் உடலை தழுவி
கொடு- (தம்மை) வெட்டினவராகிய அவ்வீரரது உடம்பை அணைத்துக் கொண்டு,
கட்டினார் விழுந்தார் - கட்டிவிழுந்தார்; (எ-று.)

     என்றது, ஒருவரை யொருவர் கொல்வதாகப் பிரதிஜ்ஞை செய்து மிக்க
கோபாவேசத்தோடு விரைந்து தொந்தயுத்தஞ் செய்கிற இரண்டு வீரருள் ஒருவன்
மற்றொருவனை முதலில் வெட்ட, முன் தொடர்ச்சியால், உடனே
அவ்வெட்டுண்டஉடல் வெட்டினவன்மேல் சென்றுவிழுந்து அவனைத்தழுவி
யணைத்துக் கீழே தள்ளிக் கொன்று அவ்வீரவாதத்தை உண்மையாக
நிறைவேற்றிற்றுஎன்றவாறும்; இது - மிக்கவீரத்தை விளக்கும். இமை, நொடி,
மாத்திரை என்பன -ஒருபொருளான; கால நுட்பமுணர்த்தும். இப்பாட்டுக்குப்
பிறவாறு உரைப்பாராயினும்உய்த்துணர்ந்து பொருந்துமாயிற் கொள்க.    (34)