பக்கம் எண் :

42பாரதம்வீட்டும பருவம்

வருக்கும் ஓருவமை கூறினார். சாதியாதன இல்லை - போர்த்திறமைக
ளெல்லாவற்றையுஞ் செய்தன ரென்பதாம் ; இரண்டு எதிர்மறை உடன்
பாட்டையுணர்த்தித் துணிவுகுறித்தன. மடங்கல் - (பிடரிமயிர்) மடங்கு
தலையுடையதெனக் காரணப்பெயராம்; பிடரி மயிருடைமைபற்றி, சிங்கத்துக்கு
வடமொழியில் 'கேஸரீ' என ஒருபெயர் வழங்குதலுங் காண்க. ஏறு -
ஆண்பாற்பெயர்; கருத்தாப்பொருளீறுபுணர்ந்துகெட்ட காரணக்குறி. மேதிநீ -
(திருமாலாற் கொல்லப்பட்ட மது கைடப ரென்னும் அசுரர்களது) உடற்
கொழுப்பினால் நனைந்தமைபற்றி, பூமிக்கு இப்பெயர்;  மேதஸ் - நிணம். (44)

45.ஆரழிந்தனவுருளழிந்தனவச்சழிந்தனவச்சிரத்
தேரழிந்துகொடிஞ்சியும்பலசின்னமானதுமன்னனும்
போரழிந்தனனென்றுசேனைபுறக்கிடாவருபொழுதினிற்
கூரழிந்ததெனக்குறித்தணிநின்றகாவலர்கூடினர்.

     (இ - ள்.) (அப்பொழுது, துரியோதனனது தேர்ச்சக்கரத்தின்), ஆர் -
இலைகள், அழிந்தன-; உருள் - சக்கரங்கள், அழிந்தன-; அச்சு - இரிசுகள்,
அழிந்தன-; வச்சிரம் தேர் அழிந்து - வச்சிரம்போல் உறுதியான தேர் சிதைந்து,
கொடிஞ்சிஉம் பல சின்னம் ஆனது - தேர்மொட்டும் பல துண்டுகளாய்விட்டது;
(அப்பொழுது), மன்னன்உம் போர் அழிந்தனன் என்று - துரியோதனனும் போரில்
தோற்றா னென்ற காரணத்தால், சேனை புறக்கு இடா வரு பொழுதினில் -
(அவனது)சேனை புறங்கொடுத்து வருகிற சமயத்தில், அணி நின்ற காவலர் -
(அவனது)சேனை வகுப்பில் நின்ற அரசர்கள் (பலர்), கூர் அழிந்தது என
குறித்து - (நமது)திறமை கெட்டதென்று கருதி, கூடினர் - ஒருங்குதிரண்டார்கள்;
(எ - று.)

     "ஆரே கூர்மையு மாத்தியு மாகுந், தேராழி யகத்திற் செறி யுறுப்புமாகும்"
என்ற திவாகரத்தாலும், "ஆர்கெழு குறடு சூட்டாழி போன்று" என்ற
சீவகசிந்தாமணியாலும், அதன் உரையாலும், தேர்ச்சக்கரத்தின் இடையிலேயுள்ள
இலைகள் ஆரெனப்படுமென விளங்கும். உருள் - சக்கரத்துக்குக் காரணப்பெயர்.
அச்சு - உருள் கோத்தமரம்; இது-அக்ஷமென்னும் வடசொல்லின் சிதைவு. வச்சிரம்-
ஒருவகையிரத்தினமென்றாவது, இந்திரனாயுதமென்றாவது, மரவச்சிர மென்றாவது
கொள்க. கொடிஞ்சி - தாமரைமலரின் வடிவமாகச் செய்து தேரின்முன்னிடத்து
வைக்கப்படுவதோருறுப்பு என்பர். சிந்நம் - வடசொல். புறக்கு - உருபுமயக்கமாக
இரண்டாம்வேற்றுமையின் பொருளில் வந்த நான்காம்வேற்றுமையென்றாவது,
இதில்கு - சாரியை யென்றாவது கொள்க.                      (45)

46.-துரியோதனனுக்குப் பக்கபலமாக அவனுடைய
மைத்துனன்மார் வருதல்.

பரித்ததேரொடுபரிதியைச்செறிபரிதிபோலிருபக்கமுந்
தரித்தவேலினர்தாரைவாளினர்தாமவில்லினராகவே